PulseNews
விளையாட்டு

அடுத்த சீசனில் வலுவான கம்பேக் கொடுப்போம்: சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வீரருமான ருதுராஜ் கெய்க்வாட், கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சி.எஸ்.கே கேப்டனாக இருப்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணம் என தெரிவித்தார். எம்.எஸ்.தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்து செய்து வருவதாகவும் கூறினார். அடுத்த 12 மாதங்களுக்கான இலக்கு குறித்து பேசிய அவர், எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு போட்டியையும் கவனத்தில் கொண்டு செயல்படுவதே தனது அணுகுமுறை என ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். அடுத்த சீசனில் சி.எஸ்.கே அணியில் தொடர்வீர்களா? என செய்தியாளர் கேட்டபோது, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என ருதுராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தியாளர், “ சி.எஸ்.கே-வில் தொடர வேண்டும்” என பதிலளிக்க, “அப்படியானால் அதுதான் பதில்” என ருதுராஜ் தெரிவித்தார். கடந்த சீசனில் சி.எஸ்.கே-வின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில், அடுத்த சீசனில் வலுவாக திரும்புவோம் என ருதுராஜ் நம்பிக்கை தெரிவித்தார். 2008 முதல் சிஎஸ்கேவுடன் ரசிகர்கள் பல வெற்றிகளையும், சிறப்பான தருணங்களையும் கொண்டாடியுள்ளதாக குறிப்பிட்ட அவர், அணியின் கடினமான காலங்களிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 13 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமை குறித்த கேள்விக்கு, அவரது திறமை மிகவும் சிறப்பாகவும், உற்சாகமளிப்பதாகவும் ருதுராஜ் பாராட்டு தெரிவித்தார். சி.எஸ்.கே அணிக்கு அடுத்த சீசனில் தலைமைப் பயிற்சியாளர் நிச்சயம் இருப்பார் என்றும், அதற்கான முடிவை எடுக்க இன்னும் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார். அடுத்த சீசனில் சிஎஸ்கேவின் கம்பேக்கிற்காக ரசிகர்கள் காத்திருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அடுத்த சீசனில் வலுவான கம்பேக் கொடுப்போம்: சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் பேட்டி
PulseNews சுருக்கம்

கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிஎஸ்கே அணியை வழிநடத்துவது ஒரு கற்றல் பயணம் என்று குறிப்பிட்டார்.

எம்.எஸ். தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றதால் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதை உணர்வதாகவும், அந்த அழுத்தத்தை விரும்பி ஏற்றுக்கொண்டு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வரும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports