PulseNews
விளையாட்டு

Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

Asia Cup 2027 Ind Vs Ban: உலகக் கோப்பையை மனதில் கொண்டு பவுன்சிங் மைதானங்களை தயார்படுத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாம்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்..!

அடுத்த ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக, 2027ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பையை 50 ஓவர் எடிஷனாக நடத்த வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்னும் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 2027 ஜூன் 18 முதல் ஜூலை 4 வரை போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியை வங்கதேசம் நடத்தும் என பரவலாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை 2027 தேதி & இடங்கள்

வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆசியக் கோப்பைத் தொடர் ஜூன் 18 அன்று தொடங்கி, அதன் இறுதிப் போட்டி ஜூலை 4 அன்று நடைபெற உள்ளது. இதற்கான உத்தேச இடங்களாக மிர்ப்பூர், சட்டோகிராம் மற்றும் சில்ஹெட் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. வங்கதேச கிரிக்கெட் வாரியம் மூன்று மைதானங்கள் குறித்த விவரங்களை ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்துடன் பகிர்ந்துள்ளதாம். இருப்பினும், இறுதி போட்டி நடத்தும் ஏற்பாடுகள் மற்றும் முழுமையான அட்டவணை ஆகியவை இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தவில்லையாம். 2027ம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகளுக்கு இந்தப் போட்டி மிகவும் பொருத்தமானதாக அமையும் என கூறப்படுகிறது.

தயாராகும் பவுன்சி மைதானங்கள்?

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆசியக் கோப்பை நடைபெறுகிறது. இதனால், வங்கதேசம் தனது நாட்டில் வழக்கமாக அமைக்கும் ஆடுகளங்களுக்கு மாற்றாக, அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் உடன் கூடிய ஆடுகளங்களைத் தயார் செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் எதிர்பார்க்கப்படும் சூழல்களுக்கு நெருக்கமான நிலைமைகளை ஆசிய அணிகளுக்கு வழங்குவதற்காக, இந்தப் போட்டித் தொடருக்கு வேகமான, அதிக பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களை ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் விரும்புவதாக தெரிகிறது. இது ஆசிய அணிகளின் பந்துவீச்சாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவுவது மட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆசிய அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கும் மிகப்பெரிய பயிற்சி தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்

வங்கதேசம் செல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேநிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவின் பங்கேற்பு உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. தற்போது, ​​ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க இந்தியா மறுக்கும் என்பதற்கு உறுதியான அறிகுறி எதுவும் இல்லை. இந்தியாவின் பங்கேற்பு குறித்த எந்தவொரு முடிவும், இறுதி அட்டவணை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் அதிகாரிகளுக்கு இடையேயான கலந்துரையாடல்களைப் பொறுத்தே அமையும்.

தற்போதைக்கு, முக்கிய விவரங்கள் தற்காலிகமானவையாகவே உள்ளன. அறிவிக்கப்பட்ட ஜூன் 18 முதல் ஜூலை 4 வரையிலான காலக்கட்டம், முன்மொழியப்பட்ட வங்கதேச மைதானங்கள் மற்றும் வேகமான ஆடுகளங்களுக்கான திட்டங்கள் ஆகிய அனைத்தும் இறுதியானதும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Read Full Article

Ipd Tamil - Latest Tamil News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
PulseNews சுருக்கம்

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை வங்கதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொடர் ஜூன் 18 முதல் ஜூலை 4 வரை மிர்ப்பூர், சட்டோகிராம் மற்றும் சில்ஹெட் ஆகிய இடங்களில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், வேகமான மற்றும் அதிக பவுன்ஸ் கொண்ட ஆடுகளங்களை அமைக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நிலவும் அரசியல் சூழலால், இத்தொடரில் இந்திய அணி பங்கேற்குமா என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தியா பங்கேற்காது என்பதற்கு எந்த உறுதியான தகவலும் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

மூலம்: Ipd Tamil - Latest Tamil NewsIpd Tamil - Latest Tamil News-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports