பிறந்தநாளில் உலக சாதனை: சச்சினின் சாதனையை முறியடித்த கிரிக்கெட் வீரர்
Atal Surpasses Sachin’s Record : பிறந்தநாளில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர் செதிகுல்லா அடல் வெறும் 120 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பிறந்தநாளில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச தனிநபர் ரன்களுக்கான உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் செதிகுல்லா அடல் தனது பிறந்தநாளில் நடைபெற்ற போட்டியில் 120 பந்துகளில் 143 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், தனது பிறந்தநாளன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
முன்னதாக இந்தச் சாதனையை சச்சின் டெண்டுல்கர் வசம் வைத்திருந்த நிலையில், அதனை தற்போது அடல் முறியடித்துள்ளார். தனது பிறந்தநாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.