டிஎன்பிஎல் - துஷார் ரஹேஜாவின் அதிரடி வீண்... திருப்பூரை வீழ்த்திய திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட் செய்தி: திண்டுக்கலில் நடந்த 17வது லீக் ஆட்டத்தில் துஷார் ரஹேஜாவின் 43 பந்துகளில் 87 ரன்கள் அதிரடி வீணாக, 196 ரன்கள் குவித்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது. TNPL cricket news: Despite Tushar Raheja’s explosive 87 off 43 balls, Tiruchirappalli Grand Cholas defend 196 and beat Tiruppur by 17 runs in the 17th league match at Dindigul.

திண்டுக்கலில் நடைபெற்ற 17-வது டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 196 ரன்களைக் குவித்தது.
இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணியில், துஷார் ரஹேஜா 43 பந்துகளில் 87 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். இருப்பினும் அவரது சிறப்பான ஆட்டம் வீணாக, திருப்பூர் அணி தோல்வியைத் தழுவியது.