IND A vs AUS A: இந்திய வம்சாவளி வீரர்களுக்கு வாய்ப்பு.. இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி அறிவிப்பு!
Australia A squad for India Tour: ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி அணியில் நிகில் சௌத்ரி மற்றும் தன்வீர் சங்கா என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தன்வீர் சங்கா ஒரு சுழற்பந்து வீச்சாளர், நிகில் சௌத்ரி ஒரு ஆல்-ரவுண்டராக அணிக்குப் பயனுள்ளதாக இருப்பார். தன்வீர் ஆஸ்திரேலியாவுக்காக 6 ஒருநாள் போட்டிகளிலும் 7 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவுள்ள ஆஸ்திரேலியா 'ஏ' ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகில் சௌத்ரி மற்றும் தன்வீர் சங்கா ஆகிய இருவர் இடம்பிடித்துள்ளனர்.
இதில் சுழற்பந்து வீச்சாளரான தன்வீர் சங்கா ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 7 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டரான நிகில் சௌத்ரி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.