18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!

18 Years of Virat Kohli: உலக கிரிக்கெட் வரலாற்றின் அரசனாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் ஒரு வீரர் விராட் கோலி. கிரிக்கெட் என்றால் விராட் கோலியை தவிர்த்து விட்டு எழுதவே முடியாது என்ற அளவிற்கு அத்தனை சாதனைகளை படைத்துள்ளார். அப்பேற்பட்ட விராட் கோலி இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகிறது.

கிரிக்கெட் அரசன்:

கிரிக்கெட்டின் கடவுள் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எல்லாம் யாராவது நெருங்க முடியுமா? தொட முடியுமா? என்றே பலரையும் கருதி இருந்த நிலையில், தன்னால் மட்டுமே அது முடியும் என்பது போல சச்சின் சாதனைகள் ஒவ்வொன்றாக தகர்த்து எறிந்து அந்த இடத்தில் அரியாசனம் போட்டு அமர்ந்து கொண்டார் விராட் கோலி. அதன் காரணமாகவே அவரை கிரிக்கெட்டின் அரசன் என்று ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

ஆரம்ப காலத்தில் சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவது தவறு என்று கூறியவர்கள் இன்று விராட் கோலியுடன் வேறு எந்த வீரரையும் தவறு என்று கூறும் அளவிற்கு அவர் சாதனைகளை படைத்து இன்று ஒரு வழிகாட்டியாக இளம் வீரர்களுக்கு மாறியுள்ளார்.

சேஸ் மாஸ்டர்:

கிரிக்கெட்டில் நெருக்கடியான தருணங்களில் மொத்த ஆட்டத்தையும் மாற்றும் வல்லமை கொண்ட வீரர் மட்டுமே காலத்திற்கும் மறக்க முடியாத வீரராக உருவெடுக்க முடியும். அப்படி ஒரு வீரராக தன்னை கட்டமைத்துக் கொண்ட விராட் கோலி சேஸ் மாஸ்டர் என்று இன்று வரை யாராலும் பறிக்க முடியாத ஒரு பட்டத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.

கோலி களத்தில் இருக்கிறார் என்றால் சேசிங் பற்றி இந்திய ரசிகர்கள் கவலையே கொள்ளத் தேவையில்லை என்றே அர்த்தம். 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் 321 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சேவாக், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாக தனி ஆளாக இலங்கையை விளாசித் தள்ளுவார் வெறும் 23 வயதே ஆன விராட் கோலி.

சம்பவங்கள்:

ஜாம்பவான் பேட்ஸ்மேன்களையே நிலைகுலைய வைக்கும் மலிங்காவை சகட்டுமேனிக்கு சிக்ஸரும்,பவுண்டரியும் விளாசி அந்த போட்டியில் இந்திய அணி 36.4 ஓவர்களில் 321 ரன்கள் இலக்கை எட்டி அபார வெற்றி பெறும். விராட் கோலி மட்டும் 86 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்ஸருடன் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

2013ம் ஆண்டு ஜெய்ப்பூரில் 362 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துவிட்டு இந்தியாவை ஏளனமாக பார்த்த ஆஸ்திரேலியாவிற்கு மறக்க முடியாத அடி கொடுப்பார் கோலி. ரோகித் சர்மா - தவான் ஜோடி 176 ரன்களை குவிக்க ஒன் டவுன் வீரராக களமிறங்கிய விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் விளாசி மொத்த ஆட்டத்தையும் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டார்.

ஜான்சன், கிளின்மெக்கே, வாட்சன், தோஹர்டி, மேக்ஸ்வெல், ஃபால்க்னர் என யார் வீசினாலும் அடிதான். இந்திய அணி 43.3 ஓவர்களில் 362 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 52 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்படி எத்தனையோ சேசிங் சாம்ராஜ்யம் நடத்தியிருந்தாலும் அத்தனை சேசிங்கிற்கும் மகுடம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் ஆடியதே ஆகும்.

மறக்க முடியுமா?

மெல்போர்ன் நகரில் நடந்த 2022 உலகக்கோப்பையில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 160 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. ஷாகின் அப்ரிடி, நசீம்ஷா, ஹாரிஷ் ராஃப், ஷதாப் கான் என மிரட்டல் பந்துவீச்சில் இந்தியா 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. மறுமுனையில் பாண்ட்யாவை வைத்துக் கொண்டு ஆட்டத்தை மெல்ல மெல்ல இந்தியாவின் கட்டுப்பாட்டில் எடுப்பார் விராட் கோலி.

8 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான தருணத்தில் ஹாரிஷ் ராஃப் வீசிய பந்தை அவரது தலைக்கு மேலே விராட் கோலி ஒரு சிக்ஸர் அடிப்பார். உலகின் தலைசிறந்த சிக்ஸர்களில் எப்போதும் அந்த சிக்ஸருக்கு முதன்மை இடம் இருக்கும். எந்த ஒரு குறையும் இல்லாத ஒரு பந்தை நெருக்கடியான நேரத்தில் சிக்ஸர் அடித்து மொத்த அழுத்தத்தையும் பாகிஸ்தான் பக்கம் திருப்புவார். அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பி கடைசியில் இந்தியாவை வெற்றி பெற வைப்பார். விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருப்பார். அந்த போட்டி விராட் கோலி சேசிங் மாஸ்டர் அல்ல சேசிங்கின் கடவுள் என்றே அனைவருக்கும் புரிய வைத்தது.

அதிக சதங்கள்:

சச்சினின் ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் சாதனையை முறியடித்து, டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை நம்பர் 1 அணியாக உலா வர வைத்து இன்றும் இந்திய அணியை தாங்கிப் பிடிக்கும் விராட் கோலி ரன் மெஷினாக மட்டுமின்றி சத மெஷினாகவும் திகழ்கிறார். 37 வயதான விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரத்து 230 ரன்களும், 314 ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரத்து 941 ரன்களும், 125 டி20 போட்டிகளில் 4 ஆயிரத்து 188 ரன்களும் எடுத்துள்ளார். 18 ஆண்டுகாலம் ஆர்சிபிக்காக ஆடி 6 ஆயிரத்து 926 ரன்கள் எடுத்துள்ளார்.

பேரரசன்:

டெஸ்டில் கேப்டனாக மட்டும் 7 இரட்டை சதம் விளாசிய விராட் கோலி, 30 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 54 சதங்களும், டி20யில் ஒரு சதமும், ஐபிஎல் தொடரில் 9 சதங்களும் விளாசி கிரிக்கெட்டிற்கே பேரரசனாக உலா வருகிறார்.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத வீரராகவும், ரசிகர்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் ஜாம்பவானாகவும் திகழ்பவர் விராட் கோலி. கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி பேசும்போதெல்லாம் கோலியின் சாதனைகளைத் தவிர்த்துவிட்டு எதனையும் குறிப்பிட முடியாது என்ற அளவிற்கு அவர் பல மைல்கற்களை எட்டியுள்ளார்.
இந்திய அணிக்காக விராட் கோலி அறிமுகமாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை யாரால் நெருங்க முடியும் என்ற விவாதங்களுக்கு மத்தியில், ஒரு வீரராக கோலி தனது 18 ஆண்டுகால பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார்.