ஜெர்மனியின் சில்ட் தீவில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டி..
ஜெர்மனியின் சில்ட் ((Sylt)) தீவில் நடைபெற்ற கைட் - சர்ஃப் ((Kite-Surf)) என்ற அலைச்சறுக்கு போட்டியில் மகளிர் பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை பிரான்ஸ் வீராங்கனை கபுசின் டெலானோய் ((Capucine Delannoy)) ஐந்தாவது முறையாக வென்றார. ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் கேரு, 0.02 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் பட்டத்தை நான்காவது முறையாக வென்றார்.

ஜெர்மனியின் சில்ட் தீவில் நடைபெற்ற கைட்-சர்ஃப் அலைச்சறுக்கு போட்டியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கபுசின் டெலானோய் மகளிர் பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் கேரு வெறும் 0.02 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.