PulseNews
விளையாட்டு

“ஒரே ஒரு கேள்விதான்...” - மனோஜ் பாண்டியன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று (18.08.2026) நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கர்நாடகாவில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “சுடப்பட்டு இறந்தவர்கள் தமிழகத்தைப் பூர்வமாகக் கொண்டவர்கள், தமிழர்கள். ஆகவே, நம்முடைய மாநில அரசு அந்தக் குடும்பத்திற்கு ஏதாவது நிதி உதவி வழங்க முன்வருமா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பதிலளித்துப் பேசுகையில், “முதலமைச்சர் விஜய்யின் ஆணைக்கிணங்க, தமிழக வனத்துறை சார்பாக, இந்த சம்பவத்தில் உயிரிழந்த அந்தோனிசாமி குடும்பத்திற்கும், ஜான் ரோஸ் பீட்டர் அவருடைய குடும்பத்திற்கும், குமார் என்பவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு விரைவில் இந்த நிதி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “அங்கே சுடப்பட்டு இறந்த தமிழர்கள் அங்கே வாழும் தமிழர்கள். இது குறித்து கண்டிப்பாக முதல்வர் விஜய் தரப்பில் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு நகர்வும் முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இப்போது வனத்துறை அமைச்சர் குறிப்பிட்டதும் கண்டிப்பாக ஆய்வில் உள்ள ஒரு விஷயம்தான். தேவையான பட்சத்தில் முதல்வர் விஜய் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார். இதற்கு ஒருசில தினங்கள் ஆகும். ஏனென்றால், அங்கு மெஜிஸ்ட்ரேட் விசாரணையும் நடைபெற்று வருகிறது. தற்போது மெஜிஸ்ட்ரேட் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது முடிந்த பிறகு, ஒரு சில நாட்களில் தேவையான அளவு நடவடிக்கை கண்டிப்பாக எடுப்போம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, திமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் பேசுகையில், “சட்ட அமைச்சர் விளக்கத்தைத் தெரிவித்திருக்கின்றார். ஒரே ஒரு கேள்விதான். நம்முடைய மாநில அரசு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றமே தனது தீர்ப்புகளில் தெரிவித்திருக்கின்ற அடிப்படையில், நம்முடைய அரசு இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?. ஏதேனும் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பியிருக்கிறோமா? அவர்கள் மீது குற்றவழக்குகள், கொலை வழக்குகள் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறோமா? அல்லது அவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்கு ஏதேனும் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோமா? என்ன நடவடிக்கை அரசு எடுத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.அதற்கு அமைச்சர் நிர்மல் குமார், “தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் மற்றவர்களுக்கும் தேவையான நடவடிக்கைகள் இன்றுதான் எடுத்துக்கொண்டு வருகிறோம். ஒரு சில நாட்களில் அனைத்தும் எடுக்கப்பட்டு வரும்” எனத் தெரிவித்தார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“ஒரே ஒரு கேள்விதான்...” - மனோஜ் பாண்டியன்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கொல்லப்பட்டவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று சுட்டிக்காட்டினார். மேலும், இது தொடர்பாக ஒரே ஒரு கேள்வி மட்டுமே இருப்பதாக மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports