171 விக்கெட்டுகள்... மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த தீப்தி சர்மா
தீப்தி சர்மா உலக சாதனை: துபாயில் ஆசிய கோப்பை டி20 போட்டியில் தாய்லாந்தை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 1.1 ஓவர்களில் ரன் விடாமல் 3 விக்கெட்டுகள் எடுத்த தீப்தி சர்மா மூலம் மகளிர் டி20 கிரிக்கெட்டில் 171 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார். | Deepti Sharma world record: Indian all-rounder Deepti Sharma takes 3 wickets for 0 runs against Thailand in Women’s Asia Cup T20 in Dubai, reaching 171 wickets to become the highest wicket-taker in women’s T20 internationals as India wins by 94 runs.

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியில், தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தீப்தி சர்மா 1.1 ஓவர்கள் பந்துவீசி, ரன் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த அபாரமான பந்துவீச்சின் மூலம், டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 171 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தீப்தி சர்மா, மகளிர் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.