ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
ரஷியா இந்தியா உறவு செய்தி: மாஸ்கோவில் ஜெய்சங்கர்–லவ்ரோ சந்திப்பில் இருநாட்டு உறவு, வர்த்தகம், உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டது. India-Russia ties: Jaishankar meets Lavrov in Moscow to discuss bilateral relations, trade, global politics and Ukraine war ahead of Putin’s BRICS summit visit to India.

மாஸ்கோவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவுடன் சந்திப்பு நடத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, வர்த்தகம், உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அரசியல் சூழல் குறித்த முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷிய அதிபர் புதின் வருகை தரவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.