PulseNews
அரசியல்

ஆளுநர் - கேரள அரசு மோதலின் மையப்புள்ளியான துணைவேந்தர்; யார் இந்த மோகனன் குஞ்ஞும்மல்?

எழுதியவர்: ஷாஜு பிலிப் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், "நீங்கள் கரப்பான் பூச்சிகளா அல்லது சிங்கங்களா?" என்று மாணவர்களிடம் கேரளா சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகனன் குஞ்ஞும்மல் திரும்பத் திரும்பக் கேட்டார். எந்தவித எதிர்வினையுமின்றி மாணவர்கள் அமர்ந்திருக்கும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகக் கேரளா அரசுடன் (இடதுசாரி மற்றும் தற்போது காங்கிரஸ்) ஆளுநர் அலுவலகம் நடத்தி வரும் மோதல்களின் மையத்தில் இருக்கும் குஞ்ஞும்மலைச் சுற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க: கடந்த முப்பதாண்டுகளாக ரேடியோ-டயக்னாசிஸ் (Radio-diagnosis) துறையில் மருத்துவ வல்லுநராகப் பணியாற்றி வரும் குஞ்ஞும்மல் (இவர் கேரளா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பொறுப்பு வகிக்கிறார்), "வெளிநாட்டுச் சக்திகள்" இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகளாக மாற்ற முயற்சிப்பதாக ஆகஸ்ட் 22-ம் தேதி குற்றம் சாட்டினார். சுதந்திர தினத்தன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சங்கல்ப் இளைஞர் உச்சிமாநாட்டில் 'வந்தே மாதரம்' குறித்து குஞ்ஞும்மல் பேசிய பேச்சு ஏற்படுத்திய சர்ச்சையைத் தொடர்ந்து இந்த கரப்பான் பூச்சி சர்ச்சையும் உருவாகியுள்ளது. கேரளாவின் அதிகாரப்பூர்வ சுதந்திர தின விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடப்படுவதைத் தவிர்க்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முடிவுக்குப் பதிலடி தரும் வகையில், "நாம் பிரார்த்தனை செய்யும்போது வந்தே மாதரம் என்று சொல்கிறோம். அது நம் தாய்; வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்களுக்குத் தங்கள் தாய் யாரென்றே தெரியவில்லை" என்று குஞ்ஞும்மல் கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய நபர் கேரளாவில் உயர்கல்வித் துறையை ஆளுநர் "காவிமயமாக்குவதன்" ஒரு பகுதியாகவே குஞ்ஞும்மலின் நியமனம் அமைந்துள்ளதாகக் கூறி, சி.பி.ஐ(எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே அவர் முதலாவதாக 2019-ல் கே.யு.எச்.எஸ் துணைவேந்தராகவும், பின்னர் 2023-ல் கேரளப் பல்கலைக்கழகத்தின் கூடுதல் பொறுப்பு துணைவேந்தராகவும் - நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அக்டோபர் 2019-ல், அன்றைய இடதுசாரி அரசு அமைத்த தேடுதல் குழுவின் பரிந்துரைகளைப் புறக்கணித்துவிட்டு, அன்றைய ஆளுநர் ஆரிஃப் முகமது கான், குஞ்ஞும்மலை கே.யு.எச்.எஸ் துணைவேந்தராகத் தேர்வு செய்தார். 2021-ல் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, உயர்கல்வித் துறை என்பது ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான தொடர் மோதல் களமாக மாறியது. முதல் மோதல் களம் 2022-ல் கேரளா பல்கலைக்கழகமாக இருந்தது; அப்போதைய துணைவேந்தர் டாக்டர் மகாதேவன் பிள்ளையின் பணிக்காலம் முடியவிருந்த நிலையில், புதிய துணைவேந்தருக்கான தேடுதல் குழுவை ஆரிஃப் கான் அமைத்தார். ஆளுநரின் முந்தைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சி.பி.ஐ(எம்) உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்திய பல்கலைக்கழக மேலவை தனது பிரதிநிதியைத் தேடுதல் குழுவிற்குப் பரிந்துரைக்கவில்லை. இதனால், ஆளுநர் ஆரிஃப் கான், குஞ்ஞும்மலுக்குக் கேரளா பல்கலைக்கழகத்தின் கூடுதல் பொறுப்பை வழங்கினார். 2024-ல், கே.யு.எச்.எஸ் துணைவேந்தராக அவரது ஐந்தாண்டு பணிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், குஞ்ஞும்மலுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் மேலும் ஒருமுறை பதவிக் கால நீடிப்பு வழங்கினார் - அதுவரை கேரளாவில் ஒரு துணைவேந்தருக்கு மீண்டும் பதவிக் காலம் வழங்குவது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. இதற்கு முந்தைய ஒரே முன்னுதாரணம் 2021-ல் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கோபிநாத் ரவீந்திரனுக்கு ஆளுநர் ஆரிஃப் கான் மீண்டும் பதவிக் காலம் வழங்கியதுதான்; சி.பி.ஐ(எம்) அரசின் வற்புறுத்தலின் பேரிலேயே தான் அவ்வாறு செயல்பட்டதாக ஆரிஃப் கான் கூறியிருந்தார். 2023-ல், ரவீந்திரனின் மறுநியமனத்தைச் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கேரள பல்கலைக்கழகம் தொடர்பாக அரசுக்கும் ஆரிஃப் கானுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி தொடர்ந்த நிலையில், பொறுப்பு துணைவேந்தராக இருந்த குஞ்ஞும்மல், ஆரிஃப் கானின் ஆதரவுடன் பல்கலைக்கழக மேலவை நியமனங்களில் ஈடுபட்டார். 2024-ல், கேரளா பல்கலைக்கழகத்திற்கு "நிரந்தர துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை" குஞ்ஞும்மலின் பதவிக் காலத்தை ஆளுநர் ஆரிஃப் கான் நீட்டித்தார். மேலவையில் இருந்த சி.பி.ஐ(எம்) உறுப்பினர்கள் இந்த முடிவை சட்டப்பூர்வமாக எதிர்த்தபோது, கேரள உயர் நீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கையை உறுதிசெய்தது; இது குஞ்ஞும்மல் துணைவேந்தராகத் தொடர வழிவகுத்தது. ஜனவரி 2025-ல் ஆரிஃப் முகமது கானுக்குப் பதிலாக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரள ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகும், அர்லேகர் கலந்துகொண்ட ஒரு விழாவில் காவிக்கொடியுடன் கூடிய பாரத மாதா உருவப்படம் வைக்கப்பட்ட விவகாரத்தில் இடதுசாரி அரசின் கோபத்திற்கு குஞ்ஞும்மல் ஆளானார். ஜூன் 25, 2025-ல், 'ஸ்ரீ பத்மநாப சேவா சமிதி' என்ற சமூக - கலாச்சார அமைப்பு, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் கேரள பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்வை நடத்தியது; இதில் அர்லேகர் கலந்துகொண்டார். பல்கலைக்கழக அரங்கம் ஒன்றில் பாரத மாதா படம் வைக்கப்பட்டதால் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட்ட பல்கலைக்கழகப் பதிவாளர் அனில் குமாரை குஞ்ஞும்மல் பணிநீக்கம் செய்தார். இந்தச் சம்பவம் போராட்டங்களைத் தூண்டியதுடன், குஞ்ஞும்மல் "ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தன் விசுவாசத்தை நிருபிப்பதாக" இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். அதே ஆண்டு மே மாதம் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் ஆட்சிக்கு வந்த பிறகும் நிலைமை பெரிதாக மாறவில்லை. ஜூன் மாதத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "சங்கப் பயணத்தின் 100 ஆண்டுகள்: புதிய எல்லைகள்" என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சொற்பொழிவுத் தொடரில் உரையாற்றினார். இந்த நிகழ்வில் குஞ்ஞும்மல் மட்டுமன்றி, எம்.ஜி பல்கலைக்கழகப் பொறுப்பு துணைவேந்தர் டாக்டர் டி. மாவூத்து மற்றும் மலையாளப் பல்கலைக்கழகப் பொறுப்பு துணைவேந்தர் டாக்டர் சி.ஆர். பிரசாத் ஆகிய இரு துணைவேந்தர்களும் கலந்துகொண்டனர். முதலமைச்சர் வி.டி. சதீசன், பகவத்தின் நிகழ்வில் மூன்று துணைவேந்தர்கள் கலந்துகொண்டது "கடுமையான தவறு" என்றும், இது மாநிலத்தின் கல்விப் பாரம்பரியத்திற்கும் துணைவேந்தர் பதவியின் கண்ணியத்திற்கும் ஏற்றதல்ல என்றும் கூறினார். இருப்பினும், சில மாதங்களுக்குப் பிறகு, சுதந்திர தினத்தன்று நடைபெற்ற மற்றொரு ஆர்.எஸ்.எஸ் நிகழ்விலும் குஞ்ஞும்மல் கலந்துகொண்டார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆளுநர் - கேரள அரசு மோதலின் மையப்புள்ளியான துணைவேந்தர்; யார் இந்த மோகனன் குஞ்ஞும்மல்?
PulseNews சுருக்கம்

கேரள சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மோகனன் குஞ்ஞும்மல், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற மாணவர்களிடம் "நீங்கள் கரப்பான் பூச்சிகளா அல்லது சிங்கங்களா?" என்று மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, குஞ்ஞும்மல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்திற்கும், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசுகளுக்கும் இடையே நிலவி வரும் மோதல்களின் மையப்புள்ளியாக இவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics