விஜய் பிரதமர் கோஷம் சீரியஸ் இல்லை; ராகுலே எதிர்க்கட்சிகளின் முகம் - மாணிக்கம் தாகூர்!

விஜயை பிரதமர் என்று தொண்டர்களின் கோஷம் அதை சீரியசாக எடுக்க வேண்டியதில்லை, என்னை கூட தான் பிரதமர் என கோஷடுகிறார்கள்; அமைச்சர்களை நான் தொண்டர்களாகதான் பார்க்கிறேன். விஜய் பிரதமர் என அமைச்சர்கள் பேசுவது குறித்த கேள்விக்கு மாணிக்கம்தாகூர் பதில்.

மாணிக்தாகூர் பேட்டி

சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் 139ஆ வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை சிம்மக்கலில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாற்றுக்கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களுக்கு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற துண்டுகளை அணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் மாணிக்தாகூர்...,"

தமிழக முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் வருங்கால பிரதமர் என பேசிவருவது குறித்த கேள்விக்கு :-

தொண்டர்கள் வரும்போது என்னையும் கூடதான் பிரதமர், மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என கோஷமிட்டார்கள் அதை சீரியசாக எடுக்க வேண்டியதில்லை. ராகுல்காந்தி தான் எதிர்கட்சிகளின் முகம், தமிழகத்தில் இந்த ஆட்சி அமைய முதல் ஆதரவு தந்தது காங்கிரஸ் கட்சி தான். தொண்டர்களின் கோஷங்களுக்கு பதில்சொலல ஆரம்பித்தால் பதில் சொல்லிகொண்டே இருக்கலாம்; தவெக அமைச்சர்களயே நான் தொண்டர்களாக தான் நினைக்கிறேன்.

எம்எல்ஏக்களுக்கு கார் அறிவிப்பு குறித்த கேள்விக்கு ?

ஊழல் செய்யாத, லஞ்சம் இல்லாத சட்டமன்ற உறுப்பினர் வேண்டுமென்றால் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும் என்பது தான் சரியானது. இல்லையெனில் மறுபடி கட்டிங் போட்டால் பழைய மாடல் மீண்டும் ரிப்பீட் ஆகிவிடும் புதிய தொடக்கத்திற்கு அதற்குரிய வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்றார்.

கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் கர்நாடக விவகாரத்தில் தமிழ்நாடு தலையிடக்கூடாது என கூறியது தொடர்பான கேள்விக்கு

ஓபிஎஸ் சொன்னது தொடர்பான கேள்வி அப்படி பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எந்த நிலையிலும் கர்நாடக அரசு, அரசியல்வாதிகள் தலையிடக்கூடாது. தமிழர்களை சுட்டுகொன்றது வன்மையாக கண்டிக்கதக்கது; அதை செய்த வனத்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் உயிரிழந்த குடும்பத்திற்கு கர்நாடக அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும்.

மேகதாது அணைக்கட்டுவதற்கான முயற்சிகள் தொடர்பான கேள்விக்கு?

மேகதாதுவில் ஒரு செங்கலை வைக்க தமிழக காங்கிரஸ் விடமாட்டோம்; மோடி அரசு இதற்கு உதவி செய்யக்கூடாது, அதிமுகவும், பாமகவும் துரோகம் செய்ய கூடாது , மோடி நினைக்கவில்லை என்றால் மேகதாது அணை நிச்சயம் வராது. கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வேண்டும் தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டிக்கிறோம், தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக முன்னாள் முதலமைச்சர் பொம்மையை கண்டிக்கிறோம், தமிழக பாஜக இதனை கண்டிக்கவில்லை என்றார்.

வடமாநில தொழிலாளர்களுக்கு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு குறித்த கேள்விக்கு?

யார் எங்கு வேலை பார்க்க வேண்டும் என்பதை யாரும் முடிவு செய்யக்கூடாது, தமிழக இளைஞர்கள் மற்ற மாநிலங்களில் வேலை பார்க்கலாம் மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் இங்கு வேலை பார்க்க கூடாது என சொல்வது சரியல்ல;

இந்திய நாடு ஒரே நாடு தான் ஆனால் தமிழ்நாடு தனி நாடு போல பேசக்கூடாது இந்தியா முழுவதும்

எங்கு பார்த்தாலும் தமிழக மாணவர்கள் பணிபுரிகிறார்கள் ஆனால் மற்றவர்கள் இங்கு பணிபுரிய கூடாது என்று சொன்னால் என்ன ஆகும்.

தவெக கூட்டணிக்கான பெயர் வைப்பது தொடர்பான கேள்விக்கு?

தவெக தலைமையில் 6 கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்தோம், 4 கட்சிகளில் அமைச்சரவையில் உள்ளோம், தவெக கூட்டணி உருவாகுவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது, பெயர்வைப்பது தொடர்பாக சட்டமன்ற கூட்டதொடர் முடிந்தவுடன் அறிவிப்புவரும்., கூட்டணிக்கு பெயர்வைத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மிகுந்த ஆர்வமுடன் உள்ளார்.

போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுப்பது தொடர்பான சுற்றறிக்கை குறித்த கேள்விக்கு?

கல்லூரிகளில் மாணவர்கள் போராடுவதை தடுக்கும் வகையிலான சுற்றறிக்கை; இது கண்டிக்கதக்கது.

தேனி குஜிலியம்பாறை தாசில்தார் கம்யூனிஸ்ட் கட்சிகள் விவரங்கள் கேட்டது தொடர்பான கேள்விக்கு

இது கண்டிக்கதக்கது. குஜிலியம்பாறை தாசில்தார் அய்யாசாமியை பணியிடமாற்றம் செய்துள்ளனர். அதிகாரிகள் ஆங்கிலேயர்கள் ஸ்டைலில் நடப்பது கண்டிக்கதக்கது. ஆங்கிலயேரிடம் பணியாற்றும் தாசில்தார் போல நடந்துள்ளார். இதனை பார்த்துக்கொள்வது வருவாய்த்துறையினர் கடமை.

விஜய் பிரதமராக வேண்டும் எனத் தொண்டர்கள் முழக்கமிடுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தன்னைக்கூட பிரதமர் எனப் பலர் முழக்கமிடுவதாகவும், இது போன்ற கோஷங்களைச் சீரியஸாகப் பார்க்க வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர்கள் தன்னைத் தொண்டர்களாகவே கருதுவதாகவும், எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தியே உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். மதுரை சிம்மக்கலில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி சத்தியமூர்த்தியின் 139-வது பிறந்தநாள் விழாவின் போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.