கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்: விசாரணை நடத்த முக்கிய கோரிக்கை
கொவிட்-19 காலப்பகுதியில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அப்போதைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை கடிதம் ஒன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிய பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயுமாறு கோரி 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடி...

கோவிட்-19 தொற்றுப் பரவலின் போது உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் கடிதம் ஒன்று கையளிக்கப்பபட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி முன்வைத்த பிரேரணையை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக ஆராயுமாறு வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டுள்ளனர்.