“எங்கள் தலைவரே சாட்சி” - அமைச்சர் மரிய வில்சன் சொன்ன குட்டி ஸ்டோரி!
நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் குட்டி கதை ஒன்றைக் கூறினார். அதில், “ஒரு பெரியவர் அடுத்து, இந்த தேசத்தை ஆளப்போவது யார் என்று ஒரு போட்டி வைத்திருக்கிறார் . அதற்கு நிறைய இளைஞர்களை அழைத்திருக்கிறார். அனைவரும் வந்து அந்தப் பெரியவரிடம் விதிமுறைகள் அனைத்தையும் கேட்ட பிறகு, அந்தப் பெரியவர் எல்லோருக்கும் ஒரு விதையைக் கொடுத்தார். விதையைக் கொடுத்துவிட்டு, ‘நீங்கள் மூன்று மாதங்கள் கழித்து இந்த விதையை நன்றாக வளர்த்து, செடியாகவும், பூக்களுடனும் வளர்த்துக் கொண்டு வாருங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார். மூன்று மாதங்கள் முடிந்ததும், அனைத்து இளைஞர்களும் வந்தார்கள். அவர்களுடைய செடிகள் அனைத்தும் நன்றாக வளர்ந்து, அழகான பூக்களுடன் செழிப்பாக இருந்தன. அவர்கள் அந்தப் பெரியவரிடம் வந்து நின்றார்கள். ஆனால், ஒருவர் மட்டும் எதையும் வளர்க்க முடியாத நிலையில், தான் பெற்ற விதையையும் அதனுடன் இருந்த தொட்டியையும் கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்து நிறைய பேர் சிரித்தார்கள்; கேலி செய்தார்கள். அப்போது அந்தப் பெரியவர், ‘இவர்தான் வெற்றி பெற்றார்’ என்று கூறினார். உடனே அனைவருக்கும் ஒரு பெரிய கேள்விக்குறி ஏற்பட்டது. ‘இது எப்படி சாத்தியம்? நாங்கள் எல்லாம் விதையை வளர்த்து கொண்டு வந்திருக்கிறோம். செடிகள் பல வண்ணங்களில் வளர்ந்திருக்கின்றன. பூக்களும் அழகாக பூத்திருக்கின்றன. ஆனால், இவர் எதையுமே வளர்க்காமல் வந்திருக்கிறார். இவரை எப்படி வெற்றியாளராக அறிவிக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெரியவர் கூறினாராம், ‘நான் கொடுத்த விதைகள் அனைத்தும் வேகவைக்கப்பட்ட விதைகள். அவை ஒருபோதும் முளைக்காது. எனவே, வெற்றி பெறுவதற்காகப் பொய் சொல்லாமல், குறுக்கு வழியைப் பின்பற்றாமல், நேர்மையாக உண்மையைச் சொல்லி வந்த இவரைத்தான் நாங்கள் தேர்வு செய்கிறோம்’ என்று கூறினாராம். வெற்றி அடைவதற்காகப் பொய் சொல்லாமல், குறுக்கு வழியைக் கடைப்பிடிக்காமல் நேர்மையாக இருந்தால், எல்லாமே இங்கே சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே (முதல்வர் விஜய்) சாட்சி.” எனத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் ஒரு குட்டி கதையைக் கூறினார். தேசத்தை ஆளப்போவது யார் என்பதைக் கண்டறிய இளைஞர்களை அழைத்த பெரியவர் ஒருவர், அவர்களுக்கு ஒவ்வொரு விதையைக் கொடுத்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு அவற்றைச் செடியாகவும் பூக்களுடனும் வளர்த்து வருமாறு பணித்தார்.
இந்தக் கதையைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எங்கள் தலைவரே சாட்சி என்று குறிப்பிட்டார். அந்தப் பெரியவர் விதித்த நிபந்தனைகளின்படி இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தக் கதை அமைந்திருந்தது.