PulseNews
அரசியல்

தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு : கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

இந்த ஆண்டு (2026) நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் பெரம்பூர் தொகுதியின் திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிரான வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (12.08.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது விரிவான பதில் அளிக்க அவகாசம் தேவை என்று முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், “இந்த வழக்கில் பதிலளிக்க முதலமைச்சர் விஜய்க்கு வரும் 25ஆம் தேதி (25.08.2026) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு : கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!
PulseNews சுருக்கம்

2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்குத் தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.

பெரம்பூர் தொகுதியில் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் அந்தத் தொகுதி வாக்காளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, உரிய கால அவகாசத்தை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics