PulseNews
அரசியல்

“கல்லூரியில் காதல் தோல்வி” - த.வெ.க. எம்.எல்.ஏ. பேச்சு; சட்டெனத் திரும்பிய முதல்வர் விஜய்!

சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் விஜய் இன்று (19.08.2026) வெளியிட்டார். அதில், “முதன்முதலாகச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியைத் தோய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் என கருதப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தைப் பராமரிக்கும் விதமாகச் செலவிற்காக மாதம் தோறும் ரூபாய் 75 ஆயிரம் வாகன படியாகவும், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் 25 ஆயிரம் உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார். இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் த.வெ.க. எம்.எல்.ஏ. சபரி பேசினார். இந்த உரையின் போது தனது கல்லூரி வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட அவர், தனக்குக் கல்லூரியில் படிக்கும் போது காதல் தோல்வி (Love Failure) ஏற்பட்டதாகவும், அப்போது கையில் வேலையோ, சொந்தமாக காரோ இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அவர் 'காதல் தோல்வி' என்று சொன்ன அந்தத் தருணத்தில், அவையில் அமர்ந்திருந்த முதலமைச்சர் விஜய் சட்டெனத் திரும்பிப் பார்த்து ஆச்சரியத்துடனும் புன்னகையுடனும் ரசித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினரின் இந்த எதார்த்தமான பேச்சைக் கேட்டு அவையிலிருந்த பிற உறுப்பினர்களும் சிரித்து மகிழ்ந்தனர். இது தொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“கல்லூரியில் காதல் தோல்வி” - த.வெ.க. எம்.எல்.ஏ. பேச்சு; சட்டெனத் திரும்பிய முதல்வர் விஜய்!
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தங்கள் தொகுதிப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் வகையில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்ய ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் என அரசு கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் போது, த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவர் "கல்லூரியில் காதல் தோல்வி" என்று பேசியதால் முதல்வர் விஜய் சட்டெனத் திரும்பிய சம்பவம் சட்டப்பேரவையில் இடம்பெற்றது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics