“கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு தடை விதித்த உத்தரவு வாபஸ்”.. கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய தமிழக அரசு!
Tamilnadu Govt withdraws protest order: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சிந்தியா செல்வி இந்த உத்தரவை வாபஸ் பெற்று அறிவித்துள்ளார்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையைத் தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவர் அமைப்புகளும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் போராட்டங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அந்த அறிவிக்கையைத் திரும்பப் பெறுவதாகக் கல்லூரி கல்வித்துறை இயக்குனர் சிந்தியா செல்வி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.