உடனடியாக அகற்றுங்கள் - யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் போராட்டம் இடம்பெற்றது. இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள குறித்த மதுபானசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்” என்ற பிரதான கோஷம் முன்வைக்கப்பட்டதுடன், மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வலியுறுத்தினர். p...

யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள், தங்கள் கிராமத்தை மதுப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர். எமது கிராமத்தை மது போதையில் இருந்து காப்பாற்றுவோம் என்ற வாசகங்களை முன்வைத்து மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.