சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று(30) இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி இலண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளை தேடி எனும் தொனிப்பொருளுடன் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது பலநூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஏற்பாடு செய...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று (30), இலங்கையில் இடம்பெற்ற போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளைத் தேடி' என்ற தொனிப்பொருளில் சர்வதேச நீதியை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு நீதிக்காக குரல் எழுப்பினர்.