PulseNews
அரசியல்

TN Assembly: இபிஎஸ் vs செங்கோட்டையன்.. சட்டசபையில் வெடித்த மோதல்.. கடுப்பான சபாநாயகர்

சட்டப்பேரவையில் 6 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது.

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு

ஆஸ்டின் (திமுக) : 6 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று ஒரு மாதத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். அதனால் 6 தொகுதி மக்களுக்கு குரல் கொடுக்க ஆளில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது எவ்வளவு சிரமம் என்பது தெரியும். ஒரு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ளாமல் பதவியை ராஜினாமா செய்கிறார்கள் என்றால் பெரிய ஆதாயம் இல்லாமல் இருக்காது.

சபாநாயகர்: 6 எம்.எல்.ஏ.க்கள் விதிகள் முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா: காலியாக உள்ள 6 தொகுதிகளில் பொறுப்பு அமைச்சரை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதலமைச்சர் நியமித்துள்ளார். அதன்மூலம் எல்லா பிரச்னைகளும் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

செங்கோட்டையன்: 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றி பேசினார்கள். எங்களைப் போன்ற அமைச்சர்கள் அங்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி: எந்த அமைச்சர் சென்று ஒரே நாளில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியும்?.. சட்டமன்ற உறுப்பினர் தான் தொகுதி மக்கள் பிரச்னையை முழுவதுமாக அறிந்துக் கொள்ள முடியும்.

செங்கோட்டையன்: விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது எங்களின் எண்ணம். அதில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

எடப்பாடி பழனிசாமி: வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்கள் மறுநாளே சட்டமன்ற முதல் மாடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

சபாநாயகர்: வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதைப்பற்றி பேசக்கூடாது என விதி உள்ளது.

செங்கோட்டையன்: அதிமுகவினர் குதிரைப்பேரம் என்றெல்லாம் பேசுகிறார்கள். எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? அவரை கட்சியில் சேர்த்துள்ளீர்களே?

எடப்பாடி பழனிசாமி: அருண் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எடப்பாடி தொகுதியில் எனக்கும், திமுக வேட்பாளர் இடையே தான் வேட்புமனு பரிசீலனையின்போது பிரச்னை ஏற்பட்டது. தவெக வேட்பாளரை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.

டென்ஷனான சபாநாயகர்

இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று குரல் எழுப்பினர். இதனால் கடும் கோபமடைந்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், இது என்ன பொதுக்கூட்டமா?.. இத்தனை பேர் எழுந்திருச்சி நிக்குறீங்க?.. என ஆவேசமாக பேசினார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
TN Assembly: இபிஎஸ் vs செங்கோட்டையன்.. சட்டசபையில் வெடித்த மோதல்.. கடுப்பான சபாநாயகர்
PulseNews சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் ஆறு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தால் அவையில் மோதல் போக்கு நிலவியது.

இந்த விவகாரத்தை திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் அவையில் எழுப்பினார். பதவியேற்று ஒரு மாதத்திலேயே ஆறு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், அந்த தொகுதி மக்களுக்கு குரல் கொடுக்க ஆளில்லாத சூழல் நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த சம்பவத்தினால் சபாநாயகர் அதிருப்தி அடைந்தார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics