PulseNews
அரசியல்

முதல்வர் விஜய் பெயரில் மோசடி; விசாரணையைத் தொடரும் மத்தியப் பிரதேச காவல்துறை

தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே தென்னிந்தியாவையும் தாண்டி, வட மாநிலங்களிலும் முதல்வர் விஜய்க்கு நல்ல வரவேற்பு உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, வருகின்ற 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தான் இந்தியாவின் பிரதமராக வருவார் என்றும் பலரும் சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நாளுக்கு நாள் தென்னிந்தியா மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் முதல்வர் விஜயின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் விஜயின் பெயரால் ஒரு கும்பல் மக்களிடம் பண மோசடி செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், விஜய்யின் அறக்கட்டளையின் மூலமாக மக்களுக்குக் கல்விக் கடன்கள், தொழிற்கடன்கள், சுய உதவிக் குழுக்கள் மூலம் கடன் வழங்கப்படுவதாகவும், அந்த கடன்களைப் பெறுவதற்கு ஜிஎஸ்டி கட்டணம், பதிவுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் கட்ட வேண்டும் எனக் கூறி, பொதுமக்களிடம் ரூ. 1,000 முதல் ரூ. 50,000 வரையில் வசூலித்து கிட்டதட்ட ரூ. 10 லட்சம் வரையில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், கட்டணம் செலுத்திய மக்கள் சில நாட்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. இதையடுத்து, தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள இந்தூர் குற்றத்தடுப்பு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இதுவரை 6 சழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடர்பாகத் தமிழக சைபர் குற்றப் பிரிவு காவல்துறையின் உதவியையும் மத்தியப் பிரதேச காவல்துறையினர் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதல்வர் விஜய் பெயரில் மோசடி; விசாரணையைத் தொடரும் மத்தியப் பிரதேச காவல்துறை
PulseNews சுருக்கம்

தமிழக முதல்வர் விஜய் அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அவர் இந்தியப் பிரதமராக வருவார் என்ற தகவல் வட மாநிலங்களில் வேகமாகப் பரவி, அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில், முதல்வர் விஜய் பெயரில் மோசடி நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி குறித்த விசாரணையை மத்தியப் பிரதேச காவல்துறை தொடர்ந்து நடத்தி வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics