PulseNews
அரசியல்

80-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்.. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி..

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் காலையில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செங்கோட்டை வந்த பிரதமர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். வந்தே மாதரம் பாடலுடன் விழா தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி தேசியக் கொடியேற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலமும் தேசியக் கொடிக்கு மலர்கள் தூவி மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய பிரதமர், இந்தியா மீதான உலக நாடுகளின் பார்வை மாறியிருப்பதாகவும், புதிய கனவுகளுடன் இந்தியா முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலை வெகுவாக குறைந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் ராணுவ தளவாடங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், மேலும் 8 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார். 2047க்குள் இந்தியாவின் அணுமின்சக்தி உற்பத்தி 100 ஜிகாவாட்டை எட்ட வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், புதிதாக மேலும் 5 அணுமின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஆற்றல் பாதுகாப்பு இந்த நேரத்தின் தேவை என்றும் தெரிவித்தார். நாட்டில் உணவு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்கட்சிகள் வதந்திகளை பரப்பிய நிலையில், மேற்காசிய போர் சூழலை வெற்றிகரமாக எதிர்கொண்டு மக்கள் நலனை இந்தியா பாதுகாத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். உற்பத்தி துறை வளர்ச்சி அடைய சர்வதேச தரத்தில் பொருட்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர், சர்வதேச பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள நவீன டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பமும் இந்தியாவில் உருவாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாட்டின் வளர்ச்சிக்கான 7 அம்ச சப்தாத்ரா திட்டத்தை பிரதமர் அறிவித்தார். உற்பத்தி, விவசாயிகள், தொழில்நுட்பம், பசுமை ஆற்றல் உள்பட 7 அம்சங்களை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டத்தை நாடு முன்னெடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் ஆயுதம் ஏந்திய நக்சல்கள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்ட பிரதமர், 'அறிவுஜீவி நக்சல்கள்' இன்னும் பதுங்கியிருக்கிறார்கள் என்பதால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். பிரதமர் உரை நிகழ்த்தியபின், தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள வண்ணங்களில் பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பின்னர், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோரை சந்தித்த பிரதமர் மோடி, விழாவில் பங்கேற்றவர்களை நோக்கி கையசைத்தபடி புறப்பட்டுச் சென்றார்.

Polimer News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
80-ஆவது சுதந்திர தின விழா கோலாகலம்.. டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி..
PulseNews சுருக்கம்

நாடு முழுவதும் இன்று 80-ஆவது சுதந்திர தின விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய விழாவில், அவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டதோடு, ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடி மீது மலர்கள் தூவப்பட்டன.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics