PulseNews
அரசியல்

சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்..!

நாட்டின் 80ஆவது சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 6 முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஓராண்டில், 1 கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சியை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறினார். பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சி அளிக்கப்படும் எனவும், இந்த நடவடிக்கை குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்றும் பிரதமர் அறிவித்தார். மேலும், விளையாட்டுத்துறையில் இந்தியா உலகளவில் சிறந்து விளங்கும் நோக்கில் நாடு தழுவிய அளவில் விளையாட்டு வீரர்களையும், திறமையாளர்களையும் கண்டறியும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். செமிகண்டக்டர் துறையில் இந்தியா தற்சார்பை நோக்கி நகர்வதாக சுட்டிக்காட்டிய பிரதமர், வரும் 7அல்லது 8 ஆண்டுகளில், கூடுதலாக 5 முதல் 8 செமிகண்டக்டர் ஆலைகள் செயல்பாட்டைத் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுசக்தியின் பங்கை வலியுறுத்திய பிரதமர், 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தி என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்..!
PulseNews சுருக்கம்

நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முதன்மையாக, வரும் ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த திறன் பயிற்சியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இலவச இணையவழிப் பயிற்சியை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது; இது மாணவர்களின் குடும்பங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டுத்துறையில் இந்தியா உலக அளவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics