PulseNews
அரசியல்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

விழுப்புரம்: தமிழ்நாட்டிற்கு இன்னும் மதுவில் இருந்து விடுதலை கிடைக்கவில்லை; சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வியடையும்; தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு 59 எம்.பி.க்கள் கிடைக்கும் - தைலாபுரத்தில் அன்புமணி ராமதாஸ் சிறப்பு பேட்டி.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது தாயார் சரஸ்வதி அம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற வருகை புரிந்தார் அப்போது தைலாபுரம் தோட்டத்தில் செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

விடுதலை நாள் வாழ்த்து - முக்கிய கோரிக்கைகள்:

அனைவருக்கும் என்னுடைய இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள். இந்த நாளில் தமிழ்நாட்டிற்கு இன்னும் மதுவிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை, போதை பழக்கத்திலிருந்து விடுதலை கிடைக்கவில்லை, விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை. வரும் காலத்தில் தமிழக அரசு பூரண மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். அத்தனை போதை பொருட்களையும் ஒழிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு கோடி படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, மழைநீரை பாதுகாத்து திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

சாதிய வன்கொடுமைக்கு காரணம் போதை தான்:

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதிய வன்கொடுமைகள், கும்பல் வன்முறை, கல்லூரி மாணவர்கள் அடித்து கொலை செய்யப்படும் சூழல் உள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, இதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம் தான். கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருட்களின் புழக்கம் முன்பு இருந்ததை விட 100 மடங்கு அதிகமாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர் பகுதியில் கூட சமீபத்தில் மாணவன் கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் போதை பழக்கம் தான்.

டாஸ்மாக் - மாண்டேக் சிங் அலுவாலியா குழு:

தமிழக அரசு, தி.மு.க அரசு மதுவை ஆன்லைன் விற்பனை, டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கூடுதல் வருவாய் பெற மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளார்கள். அந்த குழுவின் Terms of Reference-ல் டாஸ்மாக் மூலம் எப்படி கூடுதல் வருமானம் பெறலாம் என்பது தான் முக்கியமாக உள்ளது. ஒரு அரசின் கடமை மது விற்பது கிடையாது, மதுவை ஒழிப்பது தான். பெண்களை, இளைஞர்களை பாதுகாப்பது தான் கடமை. ஆனால் மதுவை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை கடுமையாக கண்டிக்கிறோம்.

பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ:

பள்ளி மாணவிகள் கூட மது அருந்தும் வீடியோ குறித்த கேள்விக்கு, நேற்று கூட பார்த்தேன். அதற்கு அறிக்கையும் விட்டிருந்தோம். கன்னியாகுமரி பகுதியில் பள்ளி மாணவிகள் மது அருந்தும் காட்சியை பார்க்கும்போது தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற வேதனை ஏற்படுகிறது. முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இளைஞர்கள் தான் அதிகம் வாக்களித்தார்கள். அவர்களை, அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும். மதுவில் 56,000 கோடி வருமானம் வருகிறது. பெண் பிள்ளைகள் மது குடிக்கும் காட்சி வேதனை அளிக்கிறது.

படிப்படியாக மதுவிலக்கு கொள்கை:

முதலமைச்சர் விஜய் அவர்கள் "இந்த வருடம் 717 மதுக்கடைகளை மூடியிருக்கிறோம், வரும் ஆண்டு 1000 கடைகளை மூடுவோம், அடுத்த ஆண்டு 2000 கடைகளை மூடுவோம், ஆட்சி இறுதிக்குள் 4800 கடைகளை முழுமையாக மூடுவோம்" என்ற கொள்கையை அறிவிக்க வேண்டும். வருவாய் ஈட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. எங்கள் நிழல் பட்ஜெட்டில் கொடுத்திருக்கிறோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வியடையும்:

மத்திய அரசு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. அதில் விண்ணப்பத்தில் SC, ST, Caste என Open List வைத்து, அவரவர் ஜாதியை அவர்களே எழுதிக்கொள்ளலாம் என காலியாக விட்டுள்ளனர். இதனால் மிகப்பெரிய குழப்பம் வரும். இது வெற்றி பெறாது. கடந்த UPA ஆட்சியில் 2011, 2013-ல் சமூக நீதி பொருளாதார கணக்கெடுப்பில் இதே முறையை பின்பற்றினர். அதனால் 4500, 5000 ஜாதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 46 லட்சம் ஜாதிகள் வந்தது. வன்னியர் சமுதாயத்தில் மட்டும் 108 பட்டப்பெயர்கள் உள்ளன. சிலருக்கு ஜாதி பெயர் தெரியாது, பட்டப்பெயர் தான் தெரியும். உதாரணமாக கவுண்டர் என்றால் வன்னிய கவுண்டர், வெள்ளாள கவுண்டர், வேட்டுவ கவுண்டர் என உள்ளது. நாயக்கர் என்றால் வன்னிய நாயக்கர், நாயுடு நாயக்கர் என உள்ளது. அது எந்த பிரிவில் போகும் என யாருக்கும் தெரியாது. ஆனால் பீகார், தெலுங்கானாவில் லிஸ்ட் கொடுத்து நம்பர் மட்டும் போட்டால் போதும் என்ற முறையை வெற்றிகரமாக செய்துள்ளனர். மத்திய அரசும் லிஸ்ட் வைத்து டிக் செய்யும் முறையை கொண்டு வர வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம். இல்லையெனில் இந்த கணக்கெடுப்பு பயன்படாது, தோல்வியடையும், பிறகு டேட்டா தவறாக உள்ளது என கூறி ரத்து செய்வார்கள். 100 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டு வரும் இதை ஒழுங்காக செய்ய வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு - 39-ல் இருந்து 59 எம்.பி.க்கள்:

தொகுதி மறுவரையறை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வருவது காங்கிரஸ் அழுத்தத்தால் தவெக அரசு கொண்டு வந்தது தான். தொகுதி மறுசீரமைப்பு தேவையானது தான். 3 மாதத்திற்கு முன்பு நாடாளுமன்றத்தில் மசோதா திருத்தம் கொண்டு வந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் Across the board 50% increase all across the states என உறுதி கொடுத்தார். தமிழ்நாட்டிற்கு 543-ல் 39 தொகுதிகள், அதாவது 7.19%. இந்த சதவீதம் அப்படியே தான் இருக்கும். யாருக்கும் பாதிப்பு இருக்காது. தமிழ்நாட்டில் 50% உயர்த்தினால் பீகார், உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் 50% உயரும். அதன்படி தமிழ்நாட்டிற்கு 39-ல் இருந்து 59 எம்.பி.க்கள் கிடைக்கும், 234 எம்.எல்.ஏ-க்களில் இருந்து 351 எம்.எல்.ஏ-க்கள் கிடைக்கும். அதில் 117 பேர் பெண் எம்.எல்.ஏ-க்கள், கட்டாயம் பெண்கள் தான் வர முடியும். இன்று 234-ல் 23 பேர் தான் பெண்கள், 39 எம்.பி-யில் 5 பேர் தான் பெண்கள். மறுசீரமைப்பு வந்தால் 59-ல் 20 பெண் எம்.பி-க்கள் வந்தே ஆக வேண்டும். இது தான் சட்டம். பெண்கள் முன்னேற்றம், Women Empowerment.

இன்று தமிழ்நாட்டில் 8 கோடி மக்களுக்கு 39 எம்.பி. சராசரியாக ஒரு எம்.பி-க்கு 20 லட்சம் மக்கள் தொகை. சில தொகுதிகளில் 35 லட்சம், சிலதில் 15 லட்சம். நான் தருமபுரி எம்.பி-யாக இருந்தபோது 2000 கிராமங்களை 5 ஆண்டில் பார்க்க முடியவில்லை. மறுசீரமைப்பு வந்தால் மக்கள் தொகை 13 லட்சமாக, வாக்காளர்கள் 10 லட்சமாக குறையும். எம்.எல்.ஏ-வுக்கு இன்று 3.5 லட்சம் மக்கள் தொகை, அது 2.25 லட்சமாக, வாக்காளர்கள் 1.25 லட்சம், சராசரியாக 1.6 லட்சமாக குறையும். இது சுலபமாக மக்களை சந்திக்க, திட்டங்களை கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

இங்கிலாந்தில் 6.5 கோடி மக்களுக்கு 650 எம்.பி-க்கள், ஒரு எம்.பி-க்கு 1 லட்சம் தான். ஜெர்மனியில் 8.4 கோடிக்கு 630 எம்.பி, சீனாவில் 140 கோடிக்கு 3000 எம்.பி, அமெரிக்காவில் 34 கோடிக்கு 450 எம்.பி, ஆனால் நமக்கு 145 கோடிக்கு 543 எம்.பி தான், போதாது.

1947-ல் 12 மாவட்டங்கள் இருந்த தமிழ்நாட்டில் இன்று 38 மாவட்டங்கள், 40 ஆண்டுகளுக்கு முன்பு 3 மாநகராட்சிகள் (சென்னை, கோவை, மதுரை) இருந்தது இன்று 25 மாநகராட்சிகள், 100 நகராட்சிகள் இருந்தது இன்று 137 நகராட்சிகள். பிரித்தால் தான் நிர்வாகத்திற்கு ஏதுவாக இருக்கும். நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு கிடைக்காது என்பதெல்லாம் தவறு. கட்சியில் உள்ள எம்.பி. எண்ணிக்கைக்கு ஏற்ப தான் நேரம் ஒதுக்குகிறார்கள். 815 எம்.பி. வந்தால் 45 நிமிடம் இருந்து ஒன்றரை மணி நேரமாக நேரம் கூடும். காங்கிரஸ் 3 மாதத்திற்கு முன்பு Fair Delimitation என்றது, இன்று No Delimitation என்கிறது.

குரூப்-2, குரூப்-4 காலியிடங்கள்:

தி.மு.க அரசு வருவதற்கு முன்பு காலியிடங்களை நிரப்புவோம் என்றது. அரசு துறையில் 6.5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. ஆனால் குரூப்-2, குரூப்-4-ல் 800, 500 என குறைவாக அறிவிக்கிறார்கள். ஏன் 5000 பேரை கொண்டு வரக்கூடாது? கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஒரு பியூன் வேலைக்கு 40 லட்சம் பேர், Ph.D, B.E, B.A, M.Sc படித்தவர்கள் போட்டியிடுகிறார்கள். ஆசிரியர் பணியில் மட்டும் 2 லட்சம் காலியிடங்கள் உள்ளன. விரைவில் நிரப்ப வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே விவகாரம்:

மல்லிகார்ஜுன கார்கேவை சாதி ரீதியாக இழிவுபடுத்தியது குறித்த கேள்விக்கு, அவர்கள் சொல்லும் வாதம் அப்படி இல்லை, மைண்டை தான் பியூரிஃபை செய்கிறோம் என சொல்லியுள்ளனர். யார் செய்தாலும் தவறு தான், யாரும் அப்படி செய்யக்கூடாது. விடுதலை அடைந்து 80 ஆண்டுகள் ஆகியும் சாதி ரீதியான அடக்குமுறை, இழிவுபடுத்தும் செயல் இருக்கக்கூடாது. அனைவருக்கும் சமூக நீதி, தரமான கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்து அனைத்து சமூகங்களும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்.

இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள்:

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை தமிழக அரசிடம் வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு, கணக்கெடுப்பு நடத்த சொல்லியிருக்கிறோம் என்றார். 717 கடைகளில் பல கடைகள் இன்னும் இயங்குகின்றன, மூடப்பட்ட கடைகள் வேறு இடத்தில் திறக்கப்பட்டுள்ளன, அவற்றை கணக்கெடுத்து வருகிறோம்.

மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு குறித்த கேள்விக்கு, இன்றா? தெரியவில்லை, தெரிந்தால் சொல்வேன் என்றார்.

11 வகை மதுபானங்கள் தடை - FSSAI:

டாஸ்மாக்கில் 11 வகை மதுபானங்களுக்கு தடை விதித்து 24 மணி நேரத்தில் மீண்டும் அனுமதித்தது குறித்த கேள்விக்கு, தடைக்கு காரணம் FSSAI சட்டம் தான். அந்த சட்டத்தை மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது 2007-08ல் நான் தான் கொண்டு வந்தேன். நாம் சாப்பிடும் பொருளில் வைட்டமின், புரோட்டீன், ஃபேட், கார்போஹைட்ரேட் போன்ற Ingredients இருக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. இவர்கள் விளம்பரப்படுத்துவது ஒன்று, விற்பது ஒன்று. தமிழ்நாட்டில் விற்பது எல்லாம் ஒரே மாதிரியான கலர் சாராயம் தான். பெயர் மட்டும் வெவ்வேறு. வெளிநாட்டில் 3, 5, 10, 20 வருடம் mature செய்து குடிப்பார்கள். ஆனால் இங்கு பேக்டரியில் இன்று தயாரித்து கலர் ஊற்றி அடுத்த நாளே குடிப்பிரியர்கள் வயிற்றுக்கு செல்கிறது. ஒரு காலத்தில் குடிகாரன் என்றார்கள், இப்போது குடிப்பிரியர், மதுப்பிரியர் என்றால் கோபப்படுகிறார்கள். இந்த சாராயம் லிவரில் பிராசஸ் ஆகி ஒரு வருடம், இரண்டு வருடத்தில் லிவர் சிரோசிஸ் வருகிறது. இந்தியாவிலேயே மதுவால் வரும் லிவர் பிரச்சனை தமிழ்நாட்டில் தான் அதிகம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
PulseNews சுருக்கம்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டிற்கு இன்னும் மதுவிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார். மத்திய அரசு மேற்கொள்ளும் சாதிவாரி கணக்கெடுப்பு தோல்வியில் முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு 59 எம்.பி.க்கள் கிடைப்பார்கள் என்றும் அவர் கூறினார். தனது தாயார் சரஸ்வதி அம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு அவர் இந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics