அமைச்சர் நிர்மல்குமாரை நோஸ் கட் செய்த சபாநாயகர்; திமுக எம்.எல்.ஏ கருத்துக்கு ஆதரவு!
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (25-08-26) தொழில்துறை, இயற்கை வளங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆஸ்டின் பேசியதாவது, “சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக ஜெரால்ட் பெலிக்ஸ் என்பவரை இந்த அரசாங்கம் நியமித்திருக்கிறது. அந்த பதவி சட்டரீதியான பதவியாக மதிப்படுகிறது. அந்த பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களிலோ கருத்துக்களிலோ மற்றவர்களை துஷ்பிரயோகம் பேசக்கூடாது, பங்கேற்கக் கூடாது என்பது சட்டவிதி. நம்முடைய தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் விதி 2010 அதை தான் சொல்கிறது. எனவே அரசியல் விவாதங்களில் அவர் பங்கு கொள்வதை சட்டப்படி தடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார், “அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அவரிடம் சட்டப்பூர்வமான தவறு இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம். ஏற்கெனவே திண்டுக்கல் லியோனியை பாட நூல் கழகத் தலைவராக நியமித்திருந்தார்கள். அவருடைய தினசரி வேலையே எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது மட்டும் தான். எனவே தவறு இருந்தால் புகார் தெரிவிக்கலாமே தவிர தனிப்பட்ட விருப்பத்திற்கு எதுவும் சொல்ல முடியாது” என்று கூறினார். அப்போது அமைச்சர் நிர்மல் குமாருக்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “சட்டரீதியான தலைவர் பதவிக்கும் சாதாரண வாரியத் தலைவர் பதவிக்கும் வித்தியாசம் இருக்கிறது. எனவே திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக, தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (25-08-26) நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆஸ்டின், சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக ஜெரால்ட் பெலிக்ஸ் நியமிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
சட்டரீதியான அந்தப் பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் சார்ந்த தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பது குறித்து அவர் தனது கருத்துகளை முன்வைத்தார். இக்கருத்திற்கு ஆதரவு தெரிவித்த சபாநாயகர், விவாதத்தின்போது குறுக்கிட்ட அமைச்சர் நிர்மல்குமாரை பேசவிடாமல் தடுத்தார்.