100 நாளில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்த்த தவெக அரசு: எத்தனை நாடுகளுடன் ஒப்பந்தம் தெரியுமா?
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், சென்னை கிண்டியில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு’ தொழில்துறை மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் 20 மாவட்டங்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த மாநாடு, தவெக அரசின் தொழில்துறை வளர்ச்சி திட்டங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசு ஆட்சியின் 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு’ தொழில் துறை மாநாட்டில், 15 நாடுகளைச் சேர்ந்த 97 நிறுவனங்களுடன் ரூ.67,452 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தத் தொழில் முதலீடுகள் மூலம் மாநிலத்தின் 20 மாவட்டங்களில் 1.06 லட்சத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அரசின் தொழில் வளர்ச்சித் திட்டங்களில் இந்த மாநாடு மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.