டாஸ்மாக் ஆன்லைன் மது விற்பனைக்குத் தடை கோரி மனு: ஐகோர்ட்டில் பா.ம.க வழக்கு
டாஸ்மாக் நிறுவனத்தின் ஆன்லைன் மது விற்பனை முடிவுக்கு எதிராக பா.ம.க-வின் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை சங்கத் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அண்மையில், ஆன்லைனில் மதுவிற்பனை முன்பதிவைத் தொடங்கி வைக்கப்பட்டது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், ஆகஸ்ட் 7-ம் தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார். அதில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது வாங்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும், ஆன்லைன் விற்பனையால் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாங்கும் அபாயம் உள்ளது என்றும் மது விற்பனையை ஊக்குவித்து அரசு வருவாய் திரட்டுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு மனுவில் கூறியுள்ளார். பா.ம.க-வின் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை சங்கத் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பள்ளிக்கூடம் மற்றும் கோவில் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த மே 12-ம் தேதி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்ட நிலையிலும், அவற்றில் பல கடைகள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் வசதியை தொடங்கி வைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் ஆகஸ்ட் 7-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்; ஆன்லைன் மூலம் மதுவாங்கும் போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மதுவகைகளை வாங்க முடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியை கொண்டு சிறுவர்களும் மது வாங்க வாய்ப்பு உள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், முதியவர்கள் மற்றும் பெண்கள் ரேஷன் கடை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்பவர்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லாத நிலையில், மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும் என வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். அதனால், ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையையும், அதற்கு அனுமதி வழங்கி நிதித்துறை செயலாளர் ஜூலை 24-ம் தேதி பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு தனது மனுவில் கோரியுள்ளார். மேலும், இந்த வழக்கில் தீர்வு காணப்படும் வரை ஆன்லைன் மது விற்பனை முன்பதிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை வைத்துள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தின் ஆன்லைன் மது விற்பனை முடிவுக்கு தடை விதிக்கக் கோரி பா.ம.க-வின் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை சங்கத் தலைவர் கே.பாலு தாக்கல் செய்துள்ள இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் ஆன்லைன் மது விற்பனைத் திட்டத்திற்கு எதிராக, பா.ம.க வழக்கறிஞர் சமூகநீதி பேரவை அமைப்பின் தலைவர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆன்லைன் வாயிலாக மது விற்பனை செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது வாங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஆன்லைன் விற்பனை முறையினால் 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களும் மதுவை எளிதாகப் பெறும் அபாயம் உள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.