இன்றைய ராசிப்பலன்-17.08.2026
இன்றைய பஞ்சாங்கம் 17-08-2026, ஆடி 32, திங்கட்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.00 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 04.59 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 04.59 வரை பின்பு அமிர்தயோகம். நாக பஞ்சமி. கருட பஞ்சமி. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் - 17.08.2026 மேஷம் இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும். மிதுனம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை. கடகம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். சிம்மம் இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. கன்னி இன்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தனுசு இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக செயல்பவீர்கள். மகரம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும். கும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் ராசிக்கு மாலை 4.19 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். மீனம் இன்று நீங்கள் உடல் சோர்வுடனும் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு மாலை 4.19 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

ஆகஸ்ட் 17, 2026, திங்கட்கிழமை, ஆடி மாதம் 32-ம் நாளுக்கான பஞ்சாங்க விவரங்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை 5 மணி வரை பஞ்சமி திதியும், அதன்பின் வளர்பிறை சஷ்டியும் நிலவுகிறது. சித்திரை நட்சத்திரம் அதிகாலை 4.59 மணி வரையிலும், தொடர்ந்து சுவாதி நட்சத்திரமும் காணப்படுகிறது. நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி என்பதால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 முதல் 9.00 வரை ராகு காலமும், 10.30 முதல் 12.00 வரை எமகண்டமும், மதியம் 1.30 முதல் 3.00 வரை குளிகை காலமும் உள்ளது. மதியம் 12.00-1.00, 3.00-4.00, மாலை 6.00-8.00 மற்றும் இரவு 10.00-11.00 ஆகிய நேரங்கள் சுப ஹோரைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றைய ராசிப்பலனில் மேஷ ராசிக்காரர்களுக்குப் பிள்ளைகள் மூலம் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.