கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதில் கடும் தாமதம்...! வெளியான தகவல்
கனடா குடியுரிமைச் சான்றிதழ் (Proof of Citizenship) பெறுவதற்கான விண்ணப்பப் பரிசீலனை காலம் 9-10 மாதங்களில் இருந்து 25 மாதங்களாக உயர்ந்துள்ளது. ஆண்டின் இறுதிக்குள் இது 3 ஆண்டுகளாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் பரம்பரை வழியிலான குடியுரிமை வரம்பை நீக்கிய கனடாவின் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றால், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கனடிய வம்சாவளியினரிடமிருந்து விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்துள்ளன...

கனடிய குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் காலம் தற்போது 9-10 மாதங்களிலிருந்து 25 மாதங்களாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகளாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் பரம்பரை வழியிலான குடியுரிமை வரம்பை நீக்கிய கனடாவின் சட்டத் திருத்தம் (Bill C-3) காரணமாக, அமெரிக்காவில் வசிக்கும் கனடிய வம்சாவளியினரிடமிருந்து விண்ணப்பங்கள் அதிகளவில் குவிந்து வருவதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது.