PulseNews
அரசியல்

இப்படி அரசு பாரபட்சம் காட்டக்கூடாது! MLA-வுக்கு கார் கொடுக்கத் தெரியுது? ஆனா ஒரு நாள் சம்பளத்தோடு லீவ் இல்ல...அரசுக்கு சவால் விட்ட தூய்மைப் பணியாளர்கள்..!!!

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி குற்றம்சாட்டியுள்ளார். பல ஆண்டுகளாக நகரின் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்து தீர்வு இல்லை சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பாக முறையான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என பாரதி தெரிவித்தார். மேலும், இந்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். இதையும் படிங்க: திறந்த போட்டி டெண்டர்..... ஒரே நாளில் ரூ.9 லட்சம் மிச்சம்..! சென்னை மாநகராட்சி டெண்டரில் இறங்கி அடித்த CM விஜய்.... ஆடிப்போன நிறுவனங்கள்!!! அரசின் விடுமுறை நடைமுறைக்கு பாரதி கேள்வி செய்தியாளர்களிடம் பேசிய பாரதி, அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்துக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குகிறது. ஆனால், தூய்மைப் பணியாளர்களின் முதல் பிரசவத்துக்குக்கூட ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டினார். தொழிலாளர்களின் உரிமைகளில் அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வலியுறுத்தல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் மற்றும் எரிபொருள் செலவுகளுக்காக ரூ.75,000 வழங்கப்படும் நிலையில், பல ஆண்டுகளாக உழைக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.19,000 மட்டுமே வழங்குவது அநீதி என பாரதி விமர்சித்தார். அதேபோல், சட்டமன்ற உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் நிர்ணயிக்கும் முதலமைச்சரால், தூய்மைப் பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.25,000 வழங்க முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நகரின் தூய்மையை தலைமுறை தலைமுறையாக பாதுகாத்து வரும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ரூ.25,000 குறைந்தபட்ச ஊதியம் வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதி வலியுறுத்தினார். இதையும் படிங்க: அழைக்கும் போதெல்லாம்... அறைக்கு சென்ற மாணவி! சொன்னதை செய்யலன்னா வீடியோவை லீக் பண்ணிடுவேன்... முன்னாள் வகுப்பறை நண்பனின் டார்ச்சல்! கதறித் துடித்து மாணவி எடுத்த விபரீத முடிவு...!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இப்படி அரசு பாரபட்சம் காட்டக்கூடாது! MLA-வுக்கு கார் கொடுக்கத் தெரியுது? ஆனா ஒரு நாள் சம்பளத்தோடு லீவ் இல்ல...அரசுக்கு சவால் விட்ட தூய்மைப் பணியாளர்கள்..!!!
PulseNews சுருக்கம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தூய்மைப் பணியாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் 25,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வசதி செய்துகொடுக்கும் அரசு, தூய்மைப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத்துடனான விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பாரபட்சம் காட்டுவதாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics