PulseNews
அரசியல்

“முதல்வர் விஜய்க்கு அந்த எண்ணம் துளியும் இல்லை” - வைகோ பரபரப்பு!

கடந்த சில தினங்களாக முதல்வர் விஜய், பிரதமர் ஆவார் என்றும் அவர் தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தவெக ஆதரவுடன் 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் அரியணையில் அமர வைக்கலாம் என காங்கிரஸ் கணக்கு போட்டிருக்கும் சூழ்நிலையில், முதல்வர் விஜய்யை பிரதமர் ஆக்கும் முடிவில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பேசி வருவது காங்கிரஸ் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் பதவியில் நீடிக்கமாட்டார்கள் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் தவெகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி இடையேயான உறவில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பிரதமர் ஆவதற்கான எண்ணமோ நோக்கமோ முதல்வர் விஜய்க்கு துளியும் இல்லை. அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பேசும்போது யோசனை செய்து பேச வேண்டும். இந்திய அளவிலேயே இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்குகிறது. அதனால் அந்த அணியினுடைய பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி நிறுத்தப்பட முடியும். இதில் மாற்று ஏற்பாட்டுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. தமிழக முதல்வருடைய கற்பனையில் கூட அந்த மாதிரி எண்ணம் இல்லை என்பது என்னுடைய கருத்து. அமைச்சர்கள் நினைத்த மாதிரியெல்லாம் பேசக்கூடாது. அகில இந்திய அளவிலேயே வரப்போகிற தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக இருக்க முடியும். அதனால் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. இனிமேல் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“முதல்வர் விஜய்க்கு அந்த எண்ணம் துளியும் இல்லை” - வைகோ பரபரப்பு!
PulseNews சுருக்கம்

தமிழக முதல்வர் விஜய் பிரதமராக வேண்டும் என்றும், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் அவரே என்றும் தவெகவின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். இது தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியைப் பிரதமராக்க காங்கிரஸ் திட்டமிட்டு வரும் சூழலில், தவெகவினர் இத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், முதல்வர் விஜய்க்கு பிரதமர் ஆகும் எண்ணம் துளியும் இல்லை என வைகோ பரபரப்புத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics