“என் வரலாறே வேற..” திருமாவளவன் அமைச்சர் பதவியை மறுத்ததன் பின்னணி ? வைரலாகும் பதிவு
விசிக தலைவர் திருமாவளவனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி முதலில் பேசப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படும் முகநூல் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.அமைச்சர் பதவியை வரலாற்று வாய்ப்பு என நாம்தான் எண்ணுகிறோம்; என் வரலாறே வேறு” என்ற திருமாவளவனின் வார்த்தைகளும் பதிவில் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பணி செய்து வரும் திருமா மாநில அரசியலுக்குள் மீண்டும் வர வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
விசிக தலைவர் திருமாவளவனுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்க முதலில் பேசப்பட்டதாகவும், ஆனால் அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அமைச்சர் பதவி என்பது வரலாற்று வாய்ப்பு என்று மற்றவர்கள் கருதினாலும், "என் வரலாறே வேறு" என திருமாவளவன் குறிப்பிட்டதாக அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வரும் திருமாவளவன், மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பமாக உள்ளது. இது குறித்த முகநூல் பதிவு தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.