PulseNews
அரசியல்

மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல்; சீக்கியர் ஒருவர் கைது..!

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான சுக்பிர் சிங் பாதல், மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள குருத்வாரா ஒன்றில் தரிசனம் செய்த போது, நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இதில், அவர் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுக்பிர் சிங் மீது தாக்குதல் நடத்திய நபர் சீக்கியர் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து நான்டெட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர் சுக்பிர் சிங் பாதலிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தனது உடல்நிலை சீராக இருப்பதாக அவர் கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டதாகவும், தாக்குதலுக்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதற்கு முன் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில் சுக்பிர் சிங் பாதல் தாக்குதலுக்கு உள்ளானார். அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சேவை செய்து கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஒருவர் முயன்றார். அவர் தாக்குவதற்கு முன்பாக மற்றவர்கள் அவரை பிடித்து காவல்துறையினரடம் ஒட்டடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல்; சீக்கியர் ஒருவர் கைது..!
PulseNews சுருக்கம்

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள குருத்வாராவில் வழிபாடு செய்தபோது, பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும் சிரோமணி அகாலி தளத் தலைவருமான சுக்பிர் சிங் பாதல் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். இந்தச் சம்பவத்தில் அவரது கையில் காயம் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்திய நபர் சீக்கியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த சுக்பிர் சிங் பாதல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நான்டெட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics