கேரளா குருவாயூர் கோவிலில் ஸ்காட்லாந்து எம்.பி. மற்றும் கேரளா பெண் திருமணம்..!
ஸ்காட்லாந்து எம்.பி. மார்ட்டின் டே மற்றும் கேரளாவைச் சேர்ந்த நிதின் சந்த்தின் திருமணம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. நிதின் சந்தின் முதல் திருமணத்தில் பிறந்த 22 வயது மகன் வேதிக் சங்கரும் திருமணத்தின்போது உடனிருந்தார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிதின் சந்த், 2008ஆம் ஆண்டு உயர் கல்விக்காக இங்கிலாந்து சென்றபோது ஸ்காட்லாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த மார்ட்டின் டே என்பவருடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறி, இருவரும் 2016ல் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாகப் பதிவுத் திருமணம் செய்தனர். எனினும், நிதின் சந்த் விருப்பத்தின்பேரில் சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே மற்றும் கேரளாவைச் சேர்ந்த நிதின் சந்த் ஆகியோரது திருமணம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் இந்து முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது நிதின் சந்தின் முதல் திருமணத்தில் பிறந்த 22 வயது மகன் வேதிக் சங்கரும் உடன் இருந்தார்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த நிதின் சந்த், 2008-ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றபோது மார்ட்டின் டேவுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. ஸ்காட்லாந்து தேசியக் கட்சியைச் சேர்ந்த இத்தம்பதியினர், ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.