முல்லைப்பெரியாறு அணை கட்டுமான பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் - கேரள முதல்வர்
சென்னை அடுத்த கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர் மாநாட்டில் முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக பேசியுள்ள கேரள முதலமைச்சர் சதீஷன், அணையின் அமைவிடம், வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடே மேற்கொள்ளலாம் என்றும், அதற்கான செலவுகளை கேரளம் ஏற்கும் என்றும் கூறினார். மேலும் அணைக்கட்டியப் பிறகு தமிழ்நாட்டிற்கு உரிய முழுப்பங்கு நீரையும் கேரளம் திறக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பேசிய கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணையாறு மற்றும் பாலாறு ஆகியவை தென் பகுதியின் வாழ்வாதாரங்களாக உள்ளதாகவும், நீர் நம்மை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது என்றும் கூறினார். மேலும், நீர் பகிர்விலிருந்து நீர் ஒத்துழைப்புக்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மாநாட்டில் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நதி நீர் விவகாரத்தில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே ஒருங்கிணைப்பு அவசியமாவதாக சுட்டிக்காட்டினார். ஆந்திரா - கர்நாடகா - தமிழ்நாட்டை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சென்னை கோவளத்தில் நடைபெற்ற தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் சதீஷன், முல்லைப் பெரியாறு அணைக்கான புதிய கட்டுமானப் பணிகள் மற்றும் வடிவமைப்பு தொடர்பான பணிகளை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார். இந்தப் பணிகளுக்கான ஒட்டுமொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அணை கட்டப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்குத் தேவையான முழு நீர் பங்கையும் தடையின்றி வழங்க கேரளம் தயாராக உள்ளதாகவும் அவர் உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று காவிரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீர் பங்கீடு குறித்து உரையாற்றினர்.