முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசிய நயினார் நாகேந்திரன்..!
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டி நயினார் அநாகரீகமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த பிப்ரவரியில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதற்காக நயினார் வருத்தம் தெரிவிதிருந்தார். இதனிடையே, நயினார் நாகேந்திரனின் அநாகரிக பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், கட்சியின் தலைவர் போல் அல்லாமல் தெருமுனை பேச்சாளர் போல் நயினார் பேசுவதாக விமர்சித்தார். அரசியல் களத்தில் கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாதவர்கள் தான் தனிப்பட்ட தாக்குதலையும், அநாகரிகமான வார்த்தைகளையும் கையில் எடுப்பார்கள் என அமைச்சர் வினோத் விமர்சித்தார். மேலும், நயினார் நாகேந்திரன் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரீகமான முறையில் பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆற்றிய உரை குறித்துக் கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாகப் பேசியதற்காக ஏற்கனவே நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் இத்தகைய பேச்சு வெளிவந்துள்ளது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அவரது இந்த அநாகரீகமான கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.