உதவித் தொகையை உயர்த்துங்கள்... கொளுத்தும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் வழங்கப்படுவது போல், தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என உயர்த்தி வழங்க வேண்டும். உதவித்தொகைக்காக விண்ணப்பித்து காத்திருக்கும் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெயில் கொளுத்தி எடுத்த நிலையிலும் மனம் தளராமல் மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநிலம் தழுவிய இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போது வருவாய்த்துறை மூலம் ரூ.1,500-ம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2,000-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இந்த தொகையை குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து நீண்டகாலமாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து, தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.நாகராஜ், கே.ராமு, கே.சிந்து பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர். கே.மோகன், ஜி.சக்திவேல், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சி.ராஜன், ஏ.சாமியப்பன், டி.பாரதி, நிர்வாகிகள் ஜி.காஞ்சனா, கே.பிரேமா, கே.நந்தினி, ராதாகிருஷ்ணன், ஆர்.எத்திராஜ், ஏ.கிறிஸ்டி, மலர்கொடி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகேயும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டப் பொருளாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளர் என்.குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இதில் மாரிமுத்து, கோகிலா, நாடிமுத்து, பன்னீர்செல்வம், தமிழ்ச்செல்வன், ஸ்டாலின், குப்புசாமி, சுப்பிரமணியன், பச்சையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆந்திர மாநிலத்தைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 என மாதாந்திர உதவித்தொகையை உயர்த்திக் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கும் சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.