PulseNews
அரசியல்

சட்டப்பேரவையை ‘லாவணி கச்சேரி’யாக மாற்ற வேண்டாம்; மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் தஞ்சையில் உ.வாசுகி வலியுறுத்தல்

தஞ்சாவூர்: சட்டப்பேரவை என்பது மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் ஜனநாயக அமைப்பு. அங்கு ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் நடைபெறும் விதத்தைப் பார்க்கும்போது, அது சட்டப்பேரவையா அல்லது ‘லாவணி கச்சேரியா’ என்ற சந்தேகம் எழுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 26 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உ.வாசுகி பேசியதாவது:

சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் நிலையில், சபாநாயகர் உள்ளிட்டோர் பாடல்கள் பாடுவது, கட்சித் தலைவர்களை புகழ்வது, தனிப்பட்ட விவகாரங்களை விவாதிப்பது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இதனால் மக்கள் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. சட்டப்பேரவை வேடிக்கையாகவும், வினோதமாகவும், வேதனையாகவும் மாறும் நிலையை கைவிட வேண்டும்.

தண்ணீரின்றி தவிக்கும் டெல்டா விவசாயிகள், ஓய்வூதியம் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை, சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காகவே சட்டப்பேரவை உள்ளது. தனிப்பட்ட பிரச்சினைகளை பேசும் இடமாக அது மாறக்கூடாது.

மாதம் ரூ.42 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம்

விலைவாசி உயர்வால் வீட்டு வாடகை, மருத்துவம், உணவு, போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்காக ஒரு குடும்பத்துக்கு தினமும் சராசரியாக ரூ.1,400 தேவைப்படுகிறது. எனவே அறிவியல்பூர்வமாக கணக்கிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.42 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.

தஞ்சை டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா சாகுபடியை பாதுகாக்க செப்டம்பர் 15-ம் தேதிக்குள் காவிரி நீரை திறக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும். இது கர்நாடக மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல; தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத கர்நாடக அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எதிரான போராட்டம் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை கர்நாடக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயித்து, அந்த விலை விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும்

குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வருமான வரம்பு உள்ளிட்ட நிபந்தனைகளை விதிப்பது தவறு. ஆண்டுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 6 ஆக உயர்த்துவதுடன், பணமாக அல்லாமல் சிலிண்டர்களாகவே வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி, இதுவரை விடுபட்டுள்ள பெண்களுக்கும் வழங்க வேண்டும்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அரசு அறிவித்ததை வரவேற்கிறோம். அதேநேரத்தில், ஏற்கனவே பெருமளவு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சிப்காட் பயன்பாட்டுக்கு வழங்குவது விமான நிலையத்துக்காக பயன்படுத்துவதற்கு சமமானது. எனவே விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

மாணவர் போராட்டங்களை ஒடுக்கக்கூடாது

மாணவர்கள், இளைஞர்கள் அரசியல் போராட்டங்களில் பங்கேற்கக்கூடாது என தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவு ஜனநாயக விரோதமானது. கல்லூரி வளாகங்களுக்குள் காவல்துறை நுழையக்கூடாது என்ற சட்ட நடைமுறை உள்ள நிலையில், சமீபகாலமாக கல்லூரி வளாகங்களுக்குள் காவல்துறை சென்று கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு இந்த உத்தரவு சட்ட அந்தஸ்து வழங்குவதாக அமைந்துவிடக் கூடாது.

கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதியை குறைத்து திட்டத்தை முடக்கக்கூடாது. ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், தினக்கூலியை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும். நகர்ப்புறங்களிலும் வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும்.

அனைவருக்கும் கல்வி, சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பு, குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். குடிமனைப் பட்டா மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். நீண்டகாலமாக வகைமாற்றம் செய்யப்படாமல் உள்ள இடங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.

மக்களின் உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும். தஞ்சை மாவட்டத்தில் வரும் அக்டோபர் மாதம் மக்கள் பிரச்சினைகளின் அடிப்படையில் பல்வேறு ஸ்தல போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என உ.வாசுகி தெரிவித்தார்.

தெருமுனைக் கூட்டங்கள்

தஞ்சை மாநகரக்குழு சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மூத்த தோழர்கள் என்.சீனிவாசன், கோ.நீலமேகம் முன்னிலை வகித்தனர். உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பேசினர். கட்சி நிர்வாகிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

முன்னதாக பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பூதலூர் நான்கு ரோட்டில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் தொடக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.சரவணன் தலைமை வகித்தார். உ.வாசுகி, சின்னை.பாண்டியன், எஸ்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். தொடர்ந்து கடைவீதியில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சட்டப்பேரவையை ‘லாவணி கச்சேரி’யாக மாற்ற வேண்டாம்; மக்கள் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் தஞ்சையில் உ.வாசுகி வலியுறுத்தல்
PulseNews சுருக்கம்

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழக சட்டப்பேரவைச் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஜனநாயக அமைப்பான சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால், தற்போதைய சட்டப்பேரவை நடவடிக்கைகளை கவனிக்கும்போது, அது சட்டப்பேரவையா அல்லது லாவணி கச்சேரியா என்ற சந்தேகம் ஏற்படுவதாக அவர் விமர்சித்தார். எனவே, அவையை லாவணி கச்சேரியாக மாற்றாமல், மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics