PulseNews
அரசியல்

“காங்கிரஸ் இல்லைன்னா தவெக கதை முடிஞ்சிருக்கும்” - மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

கடந்த சில தினங்களாக முதல்வர் விஜய், பிரதமர் ஆவார் என்றும் அவர் தான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று தவெக எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை தொடர்ந்து கூறி வருகின்றனர். இது தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் நேற்று (22-08-26) தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பிரதமர் வேட்பாளர் விஜய் தான் என தவெகவினர் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “டெல்லியில் மோடி அமித் ஷாவை எதிர்த்து எம்.பிக்கள் உள்ள கட்சிகள் எல்லாம் சேர்த்து தான் இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது. 26 கட்சிகள் சேர்ந்து ஏப்ரல் மாதம் வரைக்கும் இந்தியா கூட்டணி இருந்தது. மே மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு ஒரு கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அவர்களுடன் சேர்ந்து தேமுதிகவும், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் சைலண்டாக வெளியே வந்துவிட்டார்கள். வெளியே சொல்ல மாட்டிக்கிறார்கள், ஆனால் இந்தியாகூட்டணி கூட்டத்துக்கு வருவதில்லை. எனவே 23 கட்சிகள் தொடர்கிறது. எப்போது தவெகவுக்கு எம்.பிக்கள் வருகிறார்களோ அப்போது தவெகவை நாங்கள் இந்தியா கூட்டணியில் இணைந்துகொள்ள சொல்வோம். எம்.பி இல்லாதவர்களை நாங்கள் வாங்க, வாங்க என சொல்லிட்டு இருக்க முடியாது. அவர்களுக்கு எம்.பி கிடையாது. எம்.பி இருந்தால் தான் இந்தியா கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம். தவெகவுக்கு 109 இடங்கள் கிடைத்தவுடன் விஜய்க்கு முதலில் ராகுல் காந்தி தான் கால் பண்ணி பேசினார். அவர் முதல்வர் ஆவதற்கு ராகுல் காந்தியிடம் தான் ஆதரவு கேட்டாரு. முதல் கடிதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். அதனால் தவெகவினுடைய அமைச்சர்கள் எல்லோருக்கும் அந்த உண்மை தெரியும். அவர்கள் எல்லாம் அமைச்சர் ஆவதற்காக காங்கிரஸ் கட்சியினுடைய ஆதரவு தான் முதலில் வந்தது. இல்லையென்றால் அமித் ஷா எல்லா கதை முடித்திருப்பாரு. இன்னேரம், கட்சியை உடைத்து எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் ஆக்கி இருப்பாங்க. இந்த நிலை எல்லோருக்கும் தெரியும். தேர்தல் வரட்டும் சரியான நேரத்தில் சரியானதை விஜய் பேசுவார், பேச வேண்டிய நேரத்தில் பேசுவார்” எனப் பேசினார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“காங்கிரஸ் இல்லைன்னா தவெக கதை முடிஞ்சிருக்கும்” - மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!
PulseNews சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் விஜய் தான் இந்தியாவின் பிரதமர் வேட்பாளர் எனத் தொடர்ந்து பேசி வருவது அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சி இல்லையென்றால் தவெகவின் அரசியல் பயணம் முடிந்திருக்கும் என்று பரபரப்பான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவளிக்கவில்லை என்றால், அக்கட்சியின் நிலை என்னவாகியிருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் மாணிக்கம் தாகூரின் இந்தப் பேட்டி அமைந்துள்ளது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தவெக நிர்வாகிகள் தெரிவித்து வரும் கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics