பலஸ்தீன வீடுகளை ஆக்கிரமித்த இஸ்ரேலிய குடியேற்றவாசிகள்: பிரான்ஸ் கடும் கண்டனம்
குஸ்ரா (Qusra) கிராமத்தில் பலஸ்தீனியர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. குடியேற்றவாசிகளின் தாக்குதல் மேலும், இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது இரு-நாட்டுத் தீர்வுக்கு (Two-state solution) பெரும்...

குஸ்ரா கிராமத்தில் பலஸ்தீனர்களின் வீடுகளை இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் ஆக்கிரமித்துள்ள சம்பவத்திற்கு பிரான்ஸ் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இஸ்ரேலிய அதிகாரிகளை பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
குடியேற்றவாசிகளின் இந்தத் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் குடியேற்றக் கொள்கையானது, இரு-நாட்டுத் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளுக்குப் பெரும் தடையாக இருப்பதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது.