PulseNews
அரசியல்

இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்ட 80 உடல்கள்... சொந்த நாட்டு மக்களையே இப்படியா கொல்லுவாங்க?

கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் அருகே அமைந்துள்ள ஃபாலெரான் (Phaleron) மயானத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது, உலகையே அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அங்குள்ள 'எஸ்பிளனாடா' (Esplanada) என்ற பகுதியில், கைகளில் இரும்புக் சங்கிலியால் பூட்டப்பட்ட நிலையில் 80 மனித எலும்புக்கூடுகள் ஒரே குழியில் வரிசையாகப் புதைக்கப்பட்டிருந்தன. சுவருக்கு பின் மறைந்திருந்த தங்க மலை... 18 வயது பையனுக்கு அடித்த ரூ.80 கோடி ஜாக்பாட்; கெஞ்சும் போலீஸ் இவர்கள் அனைவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக, "இவர்கள் வெளிநாட்டுப் படைகளைச் சேர்ந்தவர்களா அல்லது கூலிப்படையினரா?" என்ற பெரிய விவாதம் தொல்பொருள் ஆய்வாளர்களிடையே நீடித்து வந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவியல் ஆய்வு அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பற்களை வைத்து நடத்தப்பட்ட 'ஸ்ட்ரோண்டியம்' ஆய்வு அரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜூலியன் ஆர். ஸ்டேமர் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், அந்த எலும்புக்கூடுகளின் பற்களில் உள்ள 'ஸ்ட்ரோண்டியம் ஐசோடோப்' (Strontium Isotope) என்ற வேதியியல் கூறுகளைப் பரிசோதனை செய்தனர். ஸ்ட்ரோண்டியம் என்றால் என்ன? மனிதர்கள் சிறுவயதில் சாப்பிடும் உணவு மற்றும் நீர் மூலமாக அவர்களது பற்களின் எனாமலில் அந்தந்தப் பகுதியின் நிலவியல் தாதுக்கள் பதிவாகிவிடும். இதைக் கொண்டு ஒரு நபர் எந்த நாட்டில் வளர்ந்தார் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும். சங்கிலியால் பிணைக்கப்பட்ட 66 பேரின் பற்கள் மற்றும் அதே மயானத்தில் புதைக்கப்பட்ட மற்ற 97 பேரின் பற்கள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 95%-க்கும் அதிகமானோர் வெளியூர் ஆட்கள் இல்லை. அவர்கள் ஏதென்ஸ் அமைந்திருக்கும் 'அட்டிகா' (Attica) பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசசிகளே என்பது உறுதியானது. ஏதென்ஸ் வரலாற்றில் நடந்த கொடூரம் முன்னதாக, இவர்கள் ஏதென்ஸ் நகரை கைப்பற்ற வந்த வெளிநாட்டுப் படைகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், இந்த ஆய்வின் மூலம் அவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல என்பதும், அரசியல் கலவரம் அல்லது உள்நாட்டுப் போரின் போது சொந்த நாட்டு மக்களுக்கே ஏதென்ஸ் அரசு இந்த கொடூரத் தண்டனையை வழங்கியுள்ளது என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கி.மு. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது, சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு ஏதென்ஸில் ஜனநாயக ஆட்சி உருவாவதற்கு முன்பு அங்கு நிலவிய கொடூரமான அதிகாரப் போட்டியின் போது இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட்டுச் சங்கிலியோடு புதைக்கப்பட்டுள்ளனர். அன்றைய காலகட்டத்தில், சொந்த ஊர் மக்களையே அரசு இவ்வளவு கொடூரமாகச் சங்கிலியால் பிணைத்துக் கொன்று புதைத்திருப்பது கிரேக்க வரலாற்று ஆய்வாளர்களை உலுக்கியுள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
இரும்பு சங்கிலியால் பூட்டப்பட்ட 80 உடல்கள்... சொந்த நாட்டு மக்களையே இப்படியா கொல்லுவாங்க?
PulseNews சுருக்கம்

கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள ஃபாலெரான் மயானத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின்போது அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிப்பட்டது. அங்குள்ள எஸ்பிளனாடா பகுதியில், 80 மனித எலும்புக்கூடுகள் கைகளில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் ஒரே குழியில் வரிசையாகப் புதைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics