முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!

தமிழ்நாட்டின் உள்ள ஒவ்வொரு மாதமும் தனித்துவம் வாய்ந்த மாதம் ஆகும். அந்த வகையில், மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருப்பது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதம் என்றாலே ஆன்மீகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது.

ஆடி கடைசி வாரம்:

அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக திகழ்கிறது. அம்மன் மட்டுமின்றி சிவபெருமான், முருகப்பெருமான் என மற்ற தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் ஆன்மீக மாதமாக இருந்தாலும் ஆடி மாதத்தில் பெரும்பாலும் திருமணங்கள் நடைபெறுவதில்லை.

ஆடி மாதம் முடிந்த பிறகு வரும் ஆவணி மாதத்தில் வரும் முகூர்த்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால், ஆடி மாதத்தில் திருமண காரியத்தை செய்யாத ஜோடிகளுக்கு இந்த மாதத்தில் திருமணம் செய்து வைப்பது வழக்கம் ஆகும்.

ஆடி முடிந்து வரும் முதல் முகூர்த்தம்:

இந்த நிலையில், ஆடி மாதம் வரும் 18ம் தேதி பிறக்கிறது. இந்த மாதத்தில் வரும் முதல் முகூர்த்த நாளாக வரும் ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளது. இந்த ஆகஸ்ட் 23ம் தேதி முகூர்த்த நாள் பல்லாயிரக்கணக்கான ஜோடிகளுக்கு தமிழ்நாட்டில் திருமணம் நடைபெற உள்ளது.

ஆடி மாதம் முடிய உள்ள நிலையில், பல திருமண வீடுகளிலும் திருமண பணிகள் மிகவும் படுஜோராக நடந்து வருகிறது. ஆவணி மாதத்தில் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில், சந்தைகளில் காய்கறிகள் வரத்து இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு திருமண பணிகளுக்காக தயாராக உள்ளது.

களைகட்டும் விற்பனை:

மேலும், ஜவுளி கடைகளிலும் பட்டுப்புடவைகள் விற்பனை, பட்டு வேஷ்டி, சட்டை விற்பனையும் மிகவும் ஜோராக நடைபெற்று வருகிறது. நகை கடைகளிலும் தங்க விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

பொதுவாக திருமணங்கள் கோயில்களிலே நடைபெறும் என்பதால் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் திருமணம் செய்வதற்கான முன்பதிவும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தில் பலரும் அம்மனுக்கு விரதம் இருத்தல் போன்ற பல்வேறு வேண்டுதலில் இருந்ததால் இறைச்சி விற்பனை குறைந்த அளவே இருந்தது. ஆடி மாதம் முடிய உள்ளதால் ஆவணி மாதத்தில் இறைச்சி விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்:

ஆடி மாத கடைசி வாரம் என்பதால் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் களை கட்டி வருகிறது. அம்மனுக்கு கூழ் வார்த்தல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்று பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனையும் செய்து வருகின்றனர்.

ஆடி கடைசி வாரம் என்பதால் கோயில்களில் கடந்த வாரத்தில் வந்த பக்தர்களை காட்டிலும் இந்த வாரம் அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்தது, அதில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. இந்த மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்ததாகக் கருதப்படுவதோடு, சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் வழிபாட்டிற்கும் சிறப்புடையதாக உள்ளது.
ஆடி மாதம் முழுவதும் ஆன்மீக நிகழ்வுகள் நிறைந்திருந்தாலும், இதில் சுப நிகழ்ச்சியான திருமணங்கள் நடைபெறுவது குறைவு. தற்போது ஆடி மாதத்தின் கடைசி வாரம் நடைபெற்று வரும் நிலையில், ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்தத்திற்காகப் பலரும் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.