PulseNews
அரசியல்

'ஆட்சி மாறினாலும் கொ@லை காட்சி மாறவில்லை; கே.என்.பாஷா கமிஷனுக்கு 3 மாதம் கெடு'-விசிகவின் ரஜினிகாந்த் ஆவேசம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அடித்தட்டு மக்களுக்கான சமூகப் பாதுகாப்பும், சட்டம்-ஒழுங்கு நிலவரமும் இன்னும் முழுமையான சீரமைப்பை எட்டவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. சாதியப் படுகொலைகள், லாக்-அப் மரணங்கள் தொடர்வதும், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகள் நடத்தும் மாநாடுகள் மற்றும் போராட்டங்களைச் சுற்றி அரசியல் வதந்திகள் பரப்பப்படுவதும் தற்போதைய அரசியல் சூழலை உற்று நோக்க வைத்துள்ளது. அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் இளைஞர் ஒருவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர், வழக்கறிஞர் ரஜினிகாந்த் நக்கீரன் டிவிக்கு கொடுத்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில், ''தமிழகத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மதுரை மேலவளவில் விசிகவினர் கொடூரமாக வெட்டப்பட்டுள்ளனர், சென்னையில் ஒரு தலித் இளைஞன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். லாக்-அப் மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சாதியப் புரையோடிய சிக்கல்களைத் தீர்க்கத் தவெக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றக் கோரி எங்கள் அமைச்சர் வன்னியரசு தொடர்ந்து முதலமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அமைக்கப்பட்ட கே.என்.பாஷா கமிஷன் மேலும் 3 மாத கால நீட்டிப்பு கேட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்குப் பிறகும் தவெக அரசு சட்டம் இயற்றவில்லை என்றால், விசிக தனது அடுத்தகட்ட எதிர்வினையைத் தீவிரமாக வெளிப்படுத்தும். அதே நேரத்தில், ஆகஸ்ட் 17 அன்று விசிக நடத்திய பிரம்மாண்ட தமிழ் தேசிய மாநாட்டிற்கு முதலமைச்சர் விஜயை அழைத்ததாகவும், அவர் வர மறுத்ததாகவும் வதந்திகள் பரப்பப்படுகின்றன; அது முற்றிலும் பொய்யானது. இந்த மாநாட்டை முழுக்க முழுக்க விசிகவின் சொந்தப் பலத்தை நிரூபிக்கவும், இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் மட்டுமே நடத்தினோம். எவரையும் சிறப்பு விருந்தினராக அழைக்கவில்லை. ஒருவேளை விஜய் வந்திருந்தால், இந்த பிரம்மாண்ட வெற்றியை விஜயைப் பார்க்க வந்த கூட்டம் என்று சுருக்கியிருப்பார்கள். விசிக மாநாட்டின் 15 லட்சம் மக்கள் திரண்ட பிரம்மாண்ட வெற்றியைக் கண்டு வயிற்றெரிச்சல் படுபவர்கள்தான் இத்தகைய டேமேஜ் வதந்திகளைப் பரப்புகிறார்கள். மக்கள் பிரச்சனைகளுக்காக விசிக அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகக் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்'' என்றார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'ஆட்சி மாறினாலும் கொ@லை காட்சி மாறவில்லை; கே.என்.பாஷா கமிஷனுக்கு 3 மாதம் கெடு'-விசிகவின் ரஜினிகாந்த் ஆவேசம்
PulseNews சுருக்கம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போதிலும், அடித்தட்டு மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு சூழலில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரஜினிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சாதியப் படுகொலைகள் மற்றும் காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் இளைஞர் ஒருவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், கே.என்.பாஷா கமிஷன் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கூட்டணிக் கட்சிகளின் போராட்டங்களுக்கு எதிராக அரசியல் வதந்திகள் பரப்பப்படுவதையும் அவர் விமர்சித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics