வேளாங்கண்ணி பாதயாத்திரை பக்தர்களுக்குச் சிதம்பரம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் வசதி!
வேளாங்கண்ணி பேராலயத்திற்குப் பாதயாத்திரையாகக் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாகத் தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இவர்களுக்கு மத பாகுபாடுகள் இல்லாமல் பல இடங்களில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பல்வேறு தரப்பினர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை மதியம் புதுச்சேரியில் இருந்து தமிழக நிதித்துறை அமைச்சர் மரியம் வில்சன் பாதயாத்திரையைத் தொடங்கி புதன்கிழமை சிதம்பரம் வழியாகச் சென்றார். இதேபோல் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களின் நலன் கருதி, சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தைப் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அலுவலக வளாகத்தில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தேவையான அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்திருக்கும். பக்தர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு பாதுகாப்பாகவும், சிரமமின்றி தங்களது பயணத்தைத் தொடருமாறு சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி பேராலயத்திற்குப் பாதயாத்திரையாகச் செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, சிதம்பரம் வழியாகச் செல்லும் போது பல்வேறு தரப்பினரும் மத வேறுபாடின்றி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில், பக்தர்களின் நலனை முன்னிட்டு சிதம்பரம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் அவர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரியிலிருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்கிய தமிழக நிதித்துறை அமைச்சர் மரியம் வில்சன், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கி புதன்கிழமை சிதம்பரம் வழியாகப் பயணம் மேற்கொண்டார். அவரைப் போலவே பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலனை உறுதி செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.