PulseNews
அரசியல்

“ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்” - த.வெ.க.வுக்கு அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் ராபின்சனின் பதவியேற்பு விழா, குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஜார்ஜ் ராபின்சனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த விழாவில் அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், “வருகின்ற 2029ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அதற்கு உடன்படாவிட்டால், காங்கிரஸ் கட்சியினுடைய இரண்டு அமைச்சர்களும் இந்தப் பதவியில் நீடிக்க மாட்டார்கள். இது எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்லக்கூடிய கருத்து. ஏனென்றால், இந்தக் கட்சிதான் எங்களுக்குப் பெரிது. இந்தக் கட்சி இல்லாவிட்டால் இந்த ராஜேஷ்குமார் ஒன்றுமே கிடையாது. இந்த இயக்கம்தான் பெரிது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ, நாளைக்கு இந்தப் பதவியை விட்டுச் செல்ல வேண்டும் என்று சொன்னால், அடுத்த நிமிடமே பதவியை விட்டுச் சென்றுவிடுவேன். ஆகவே, பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்; ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். நம்முடைய காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலைத் தொண்டருடைய முகம் ராகுல் காந்தி. என்னுடைய முகம் ராகுல் காந்தி. இந்திய மக்களுடைய முகம் ராகுல் காந்தி. அந்த முகமான ராகுல் காந்திதான் பிரதமராக வர வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியினுடைய கடைநிலைத் தொண்டர்களுடைய விருப்பம். அதை நிறைவேற்றியே தீர்வோம் என்பதுதான் இந்த சபதம்” எனத் தெரிவித்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார்” - த.வெ.க.வுக்கு அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரிக்கை!
PulseNews சுருக்கம்

குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி சந்திப்பில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் ராபின்சனின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஜார்ஜ் ராபின்சனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜேஷ் குமார், வரும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார் என்று குறிப்பிட்டார். மேலும், தவெக கட்சிக்கு அவர் எச்சரிக்கை விடுத்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics