PulseNews
அரசியல்

RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி

RB Udhaykumar: மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய தவெக கண்கட்டி வித்தையை காட்டியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆர். பி. உதயகுமார் காட்டம்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால் வளைத்துப் போட்டு புதிய ஆட்சி அமைத்து தற்போது தமிழ்நாட்டின் முதல்வராக வலம் வருகிறார்.

ஆனால், தவெக பட்ஜெட் என்பது தமிழ்நாட்டில் கஜானா காலியாக உள்ளதைச் சொல்லும் ஒரு மாபெரும் சரித்திர காவியமாகத்தான் இப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடித்திருக்கிறது.
தேர்தல் அறிக்கையில் சொன்ன பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உரிமைத்தொகையை இந்த பட்ஜெட்டில் ஏன் அறிவிக்கவில்லை? கஜானா காலியாக இருக்கும்போது ஆண்டுக்கு 30,000 கோடிக்கு அதிகமாக செலவாகும் இந்த திட்டத்தை செயல்படுத்த கொஞ்சம் ஆழ்ந்த பொருளாதார அனுபவம் தேவை என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த அனுபவம் உள்ள கட்சியினர்களுக்கு தெரியும்.

”தவெகவினர் அரசியல் கத்துக்குட்டிகள்”

ஆனால் அரசியல் கத்துக்குட்டிகளான தவெக கட்சி துணிச்சலோடு இந்த 2500 ரூபாய் திட்டத்தை அறிவித்து, இப்போது செயல்படுத்த துணிச்சல் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் துவண்டு போய்விட்டது தவெக அரசு என்பது நிதர்சனமான உண்மை. இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களின் கேள்வி என்ன தெரியுமா? தேர்தல் அறிக்கையை தயாரித்த தவெக கட்சிக்காரர்களுக்கு இது சாத்தியமில்லை என்று தேர்தலுக்கு முன்பே தெரியுமா, தெரியாதா? நன்றாகவே தெரியும். தெரிந்தும் ஏன் தவெக வாக்குறுதி அளித்தது? இது விஜய்யின் வாக்குறுதி மோசடியாகும். மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய தவெக கட்சி காட்டிய கண்கட்டி வித்தை, இப்போது ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் சொன்ன மாபெரும் மோசடியை மறைக்க தவெக அரசு எடுத்திருக்கும் தந்திரம்தான் தாய்மாமன் சீர்திட்டம், அண்ணன் சீர்திட்டம் என்று அதிரடி அறிவிப்புகள்.

அரசு எப்படி நிதி திரட்டப் போகிறது?

15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப் போவதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. தொழில் வளர்ச்சி மூலம் வருவாயை பெருக்காமல், மறைமுக வரிகளையும், மதுபான உற்பத்தியாளர்களை நம்பிதான் கஜானாவை நிரப்ப நினைக்கிறது விஜய்யின் பொருளாதார மாடல். மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன? விஜய்யின் பொருளாதார மாடலா? அல்லது வெற்றி பொருளாதார மாடலா? அல்லது வெற்று பொருளாதார மாடலா? என்பதுதான் இப்போதைய புரியாத புதிராக இருக்கிறது.

இதையும் படியுங்கள்: Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் 717 சில்லறை மதுபான கடைகளை மூடிவிட்டதாக அறிவித்த மதுவிலக்கு நாடகம், இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் அறிவிப்பு வெளியிட்ட அதே மூச்சில் மதுபான உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிப்பதின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1000 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. டாஸ்மார்க் வருமானத்தை நம்பித்தான் திராவிட கட்சிகள் ஆண்டன என்று வீர வசனமாக முழங்கிய விஜய் , இப்போது அதே மதுபான ஆலை உற்பத்தியாளரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்து கஜானாவை நிரப்ப நினைப்பது எந்த வகையான அறத்தின் ஆட்சியாகும்?

தமிழ்நாடு சரிவு..!

ஆறாவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டின் தொழில் துறை, விஜய் பொறுப்பேற்றதற்கு பிறகு 17வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த சாதனையும் வேதனையும் என்னவென்று சொல்வது? ஆக, வெற்றி வெற்றி என்று பெயரில் அறிவித்துவிட்டு, நடைமுறையிலே வெற்று வெற்று என்று சறுக்கிக் கொண்டிருக்கிற தவெக அரசின் தடுமாற்றம் தமிழகத்தை எங்கே போய் நிறுத்துமோ? கவலையோடு கண்ணீரோடு காத்திருக்கிறது தமிழகம்” என ஆர்.பி. உதயகுமார் சாடியுள்ளார்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
PulseNews சுருக்கம்

தமிழக அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முதல்வர் விஜய் மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவதாகவும், மதுபான விற்பனை மூலம் மட்டுமே அரசு கஜானாவை நிரப்ப முயற்சிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் கண்கட்டி வித்தையில் ஈடுபட்டுள்ளதாக ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்படுவதே வெற்றியின் ரகசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics