PulseNews
அரசியல்

முழு அடைப்பு போராட்டம் : தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் கைது!

கர்நாடக அரசு சார்பில் மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் உள்ள பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இன்று (13.08.2026) அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் திடீரென நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் அமர்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு மற்றும் கர்நாடக காவல்துறையினர், போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மற்றொருபுறம் பெங்களூருவிற்குச் செல்லக்கூடிய பேருந்துகள் சிறிது நேரம் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்ல முயன்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாகப் பயணிகள் ஜூஜுவாடி எல்லைப் பகுதியில் இருந்து கர்நாடகா பகுதிக்கு நடந்து செல்லும் நிலை உருவானது. இதனையடுத்து தமிழ்நாடு - கர்நாடகா இடையேயான போக்குவரத்து முழுமையாக சீரடைந்து ஜூஜுவாடி எல்லைப் பகுதி வழியாகச் செல்லக்கூடிய அனைத்து பேருந்துகளும் தற்போது வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முழு அடைப்பு போராட்டம் : தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் கன்னட அமைப்பினர் கைது!
PulseNews சுருக்கம்

மேகதாது அணை கட்டும் திட்டத்திற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் இன்று (13.08.2026) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதன் ஒரு பகுதியாக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பின் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர், தமிழ்நாடு - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அந்த அமைப்பினர் அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics