Palani: பழனி முருகனின் தங்கத்தொட்டிலில் உங்கள் குழந்தை.. எவ்வளவு கட்டணம்?.. முன்பதிவு செய்வது எப்படி?

பழனி முருகன் கோயிலில் இருக்கும் தங்கத் தொட்டிலில் உங்கள் குழந்தையை தாலாட்ட முன்பதிவு செய்வது எப்படி என்பது பற்றிக் காணலாம்.

பழனி முருகன் கோயில்

தமிழ்க்கடவுள் என கொண்டாடப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு தான் திண்டுக்கல் மாவட்டம் பழனியாகும்.

தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான இது மலைக்கோயிலாகும். தனக்கு ஞானப்பழம் கிடைக்காததால் கோபத்தில் முருகப்பெருமான் தன் ஆடை, அணிகலன்களை துறந்து ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வந்து அமர்ந்தார். இந்த கோயிலில் முருகன் தண்டாயுதபாணி என்ற பெயரில் வீற்றிருக்கிறார். இக்கோயிலில் முருகன் சிலை நவபாஷணம் கொண்டு செயப்பட்டுள்ளது. இந்த சிலை மீது பட்டு வரும் அபிஷேகப் பொருட்கள் பல நோய்களை குணமாக்கும் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.

பழனி முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி போன்ற விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். பழனி மலையை நாம் படிக்கட்டுகள் வழியாகவோ, மின் இழுவை வண்டி, ரோப் கார் ஆகியவை மூலமும் மேல் ஏறலாம். பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் பிரபலமானது. இதற்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தங்கத்தொட்டில் திட்டம்

பழனி முருகன் கோயிலில் கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தங்கத் தொட்டில் திட்டம் தொடங்கப்பட்டது. ஓசூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கிய இந்த தங்கத்தொட்டில் திட்டம் மிக சிறப்பாக செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு இந்த தங்கத்தொட்டில் அறை நவீன வசதிகளுடன் முழுமையாக புதுப்பிக்கப்பட்டது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை

இந்த திட்டத்தை நாம் ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் அணுக முடியும். தங்க தொட்டிலில் உங்கள் குழந்தையை தாலாட்ட ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளே செல்ல வேண்டும். அதில் Temple Booking Services என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதனுள் Temple Services Paid / Donation Services என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் தங்கத் தொட்டில் திட்டம் (Prathana Golden Cradle Online) என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

அதில் ஒவ்வொரு வாரமும் தேதி வாரியாக முன்பதிவு டிக்கெட் ரிலீஸ் செய்யப்படும். நீங்கள் விரும்பும் தேதியை கிளிக் செய்து அதில் உங்கள் பெயர், முகவரி, அடையாள சான்று போன்றவை கொடுத்து பணம் செலுத்தலாம். வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் 044 - 28339999 / 0454 5241293 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். நீங்கள் பணம் செலுத்திய ரசீதை நேரில் சென்று வழங்கி உங்கள் குழந்தையை தங்கத் தொட்டிலில் தாலாட்டலாம்.

நேரில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் கோயிலில் உள்ள அலுவலகத்தில் நேரடியாக சென்று டிக்கெட் பெறலாம். இதற்காக பிரத்யேக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவானது ஒவ்வொரு நாளும் முந்தைய தினம் இரவு 11.58 மணிக்கு நிறைவடையும். எனவே அடுத்தமுறை பழனி சென்றால் மறக்காமல் குழந்தைகளை தங்கத் தொட்டிலில் தாலாட்டி மகிழுங்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கோயிலில், குழந்தைகளைத் தங்கத் தொட்டிலில் இட்டு தாலாட்டுவதற்குத் தேவையான முன்பதிவு முறைகள் மற்றும் அதன் கட்டண விவரங்கள் குறித்து இங்கே காணலாம்.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழும் பழனி மலைக்கோயில், ஞானப்பழம் கிடைக்காததால் கோபம் கொண்டு ஆண்டி கோலத்தில் முருகன் அமர்ந்திருக்கும் சிறப்பினைப் பெற்றுள்ளது. இக்கோயிலில் உள்ள தங்கத் தொட்டிலில் குழந்தைகளை அமர்த்த விரும்புவோர் எவ்வாறு முன்பதிவு செய்வது என்பது குறித்த முழுமையான தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.