PulseNews
அரசியல்

ரஷ்யாவுக்கே பெட்ரோல் விற்ற இந்தியா; வல்லரசு நாட்டையே தலைகீழாக திருப்பிய ட்ரோன் அட்டாக்

உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் வல்லரசு நாடான ரஷ்யா, முதன்முறையாக இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, உலகிற்கே எண்ணெய் விநியோகம் செய்யும் ரஷ்யாவிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்வது சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. வைரங்களால் உருவான நகரம்... இங்க போனா பாக்குற இடம் எல்லாம் டைமண்டாக தான் இருக்கும்; ஆனா இது ஒரு பேய் சிட்டி நயாரா எனர்ஜி நிறுவனத்திலிருந்து ரஷ்யாவிற்குப் பறந்த பெட்ரோல் ப்ளூம்பெர்க் (Bloomberg) ஊடக அறிக்கைப்படி, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று இந்திய அமைப்பான 'நயாரா எனர்ஜி' (Nayara Energy) நிறுவனத்திடமிருந்து சுமார் 42,000 பேரல் பெட்ரோல் அடங்கிய சரக்கை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தின் வாடிநார் (Vadinar) துறைமுகத்திலிருந்து ஜூன் 18 அன்று 'சைக்ளோன்' (Cyclone) என்ற ரஷ்யக் கப்பலில் 42,000 டன் பெட்ரோல் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் எகிப்தின் டாமியேட்டா (Damietta) துறைமுகத்தில் வைத்து 'கார்னெட்' (Garnet) என்ற கப்பலுக்கு மாற்றப்பட்டு, ஆகஸ்ட் தொடக்கத்தில் ரஷ்யாவைச் சென்றடைந்துள்ளது. ஜூலை மாதத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் வாடிநார் துறைமுகத்திலிருந்து எரிபொருளை ஏற்றிக்கொண்டு எகிப்து வழியாக ரஷ்யாவிற்குச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராய்ட்டர்ஸ் (Reuters) தகவல்படி, கடல் வழியாகக் குறைந்தபட்சம் 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவை நிலைகுலைய வைத்த உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவிடம் உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பு இருந்தாலும், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட முக்கியமான காரணம் உக்ரைன் நடத்தி வரும் தொடர் ட்ரோன் தாக்குதல்கள் தான். 2026 ஜனவரி முதல் மே வரை ரஷ்யாவின் 16 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கி அழித்தன. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேலும் 15 முக்கிய சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டன. இதில் கிரெம்ளின் மாளிகையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சுத்திகரிப்பு நிலையமும் அடங்கும். சுத்திகரிப்பு திறன் சரிவு இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவால் கச்சா எண்ணெயை பெட்ரோலாக மாற்ற முடியாமல் போனது. ஜூலை தொடக்கத்தில் ரஷ்யாவின் சுத்திகரிப்பு திறன் நாள் ஒன்றுக்கு 3.91 மில்லியன் பேரல்களாகக் குறைந்தது. இது 2005-ஆம் ஆண்டிற்குப் பிறகான மிகக் குறைந்த அளவாகும். உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யா பெட்ரோல் ஏற்றுமதிக்கு 2026 இறுதி வரை தடை விதித்துள்ளது. இருப்பினும் கோடைகாலத்தில் நாள் ஒன்றுக்கு 1,10,000 டன்கள் வரை தேவை அதிகரிப்பதால் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இதில் இந்தியாவின் பங்கு என்ன? ரஷ்யா தனது உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்க மாதம் தோறும் 4,00,000 டன்கள் பெட்ரோலை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவிலிருந்தும் எரிபொருளைப் பெறுகிறது. பெட்ரோலை ஏற்றுமதி செய்யும் குஜராத்தின் வாடிநார் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தும் 'நயாரா எனர்ஜி' நிறுவனத்தில், ரஷ்யாவின் மிகப்பெரிய அரசு நிறுவனமான 'ரோஸ்நெஃப்ட்' (Rosneft) 49.13% பங்குகளைக் கொண்டுள்ளது. அதிகரித்த கச்சா எண்ணெய் இறக்குமதி அதே நேரத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயின் அளவு வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. ஜூலை 2026-இல் இந்தியா இறக்குமதி செய்த மொத்த கச்சா எண்ணெயில் 55.5%, அதாவது, நாளைக்கு 2.8 மில்லியன் பேரல்கள் ரஷ்யாவிடமிருந்து மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் சுத்திகரிப்பு நிலையங்களை இழந்த ரஷ்யா, இந்தியாவிடமிருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரஷ்யாவுக்கே பெட்ரோல் விற்ற இந்தியா; வல்லரசு நாட்டையே தலைகீழாக திருப்பிய ட்ரோன் அட்டாக்
PulseNews சுருக்கம்

கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா, தற்போது முதன்முறையாக இந்தியாவிடமிருந்து பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

தனக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியா, உலகிற்கே எண்ணெய் விநியோகம் செய்யும் ரஷ்யாவிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்திருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics