PulseNews
அரசியல்

'ஒரே இரவில் எப்படி அறிவிக்க முடியுமா?; உயர்கல்வி அமைச்சருக்கு இது கூட தெரியாதா?'-வெளுத்த புதுமடம் ஹலீம்

பாஜக அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போல ஒரே இரவில் தொகுதி மறுவரையறையையும் அறிவித்துவிடும் எனத் தவெக அரசின் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் அச்சம் தெரிவித்துள்ளதற்குப் புதுமடம் ஹலீம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நக்கீரன் டிவி சேனலுக்கு அரசியல் விமர்சகர் புதுமடம் ஹலீம் அளித்த பேட்டியில் இதுகுறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில்,''தவெக அரசின் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் அவர்களுக்கு தொகுதி மறுவரையறை குறித்தோ, நாட்டின் அரசமைப்புச் சட்டம் குறித்தோ எந்தவொரு புரிதலும் இல்லை என்பது அவரது பேச்சிலிருந்தே மிகத் தெளிவாகத் தெரிகிறது. உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் பேசும்போது 'இரவு எட்டு மணிக்கு திடீரென்று அறிவித்தால், அதேபோல ஒரு நிலைமை நாளைக்கு வந்துவிட்டால் என்ன பண்ணுவது' என்று ஏதோ பயந்து நடுங்குவதைப் போலப் பேசுகிறார். ஒரு நாட்டின் உயர்கல்வி அமைச்சரே இப்படிப் பயந்து பேசுவதைக் கேட்கும்போது எனக்கு நெஞ்சம் பகீர் என்கிறது. ஓவர் நைட்ல வந்து அறிவித்துவிடுவார்கள் என்று எப்படி ஒரு உயர்கல்வி அமைச்சர் சொல்ல முடியும்? அறிவித்தால் என்ன செய்வது என்று கேட்பதற்கு அவர்கள் ஒன்றும் பயப்படத் தேவையில்லை, அதை அப்படி திடீரென்று ஒரே இரவில் அறிவிக்க முடியாது. நீங்கள் நினைக்கிற மாதிரி இந்த அரசமைப்பு திருத்தச் சட்டத்தை எல்லாம் எடுத்தோம் கவுத்தோம் என்று மாற்றிவிட முடியாது. பிரதமர் மோடி திடீரென்று இரவு எட்டு மணிக்கு வந்து பணமதிப்பிழப்பு (டிமானிடைசேஷன்) அறிவித்தார், அது உண்மைதான். ஆனால், பணமதிப்பு இழப்பு என்பது அரசின் கொள்கை முடிவு மட்டுமே, அது அரசமைப்புச் சட்டத் திருத்தம் கிடையாது. எங்களுடைய 500 ரூபாய் செல்லாது, புது நோட்டு கொண்டு வருகிறோம் என்பது அந்த ஆட்சியாளர்களுடைய கொள்கை முடிவு. அதை நீங்கள் ஒரு இரவிலோ அல்லது ஒரு நிமிடத்திலோ கூட அறிவித்துவிடலாம், அதற்கு நாடாளுமன்ற எம்பிக்களுடைய ஆதரவு தேவை என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒரு சட்ட திருத்தம், குறிப்பாக அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்பது முற்றிலும் வேறுபட்டது. இப்போது இந்தியாவில் இருக்கின்ற 543 நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 இடங்களாக மாற்றுவது என்பது நீங்கள் ஒரு நைட்டில் வந்து அறிவிக்க முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை. அது பாராளுமன்றத்தில் முறையான சட்டமாகக் கொண்டு வரப்பட வேண்டும். ஏன் கடந்த முறை குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை பாஜக அரசால் நிறைவேற்ற முடியவில்லை? ஏனென்றால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் அதற்குத் தேவையான எம்பிக்களின் ஆதரவு இல்லை. இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு கட்டாயம் வேண்டும், அவர்கள் ஆதரித்து ஓட்டு போட வேண்டும், அப்போதுதான் அதை நிறைவேற்ற முடியும். தற்போதைய நிலவரப்படி பாஜகவுக்கு அந்தப் பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் இல்லை. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 850 இருக்கைகளைக் கட்டிவிட்டார்கள் என்பதற்காக, நாடாளுமன்றத்தைக் கட்டிவிட்ட காரணத்தினாலேயே டக்குனு இனிமேல் 850 தான் எம்பிகள் என்று அதிகாரப்பூர்வமாகச் சொல்லிவிட முடியுமா? அதற்குச் சட்டத் திருத்தம் செய்யாமல் எதுவும் செய்ய முடியாது. ஒரு இரவில் எல்லாம் இதைப் பண்ண முடியாது சார், இது முதற்கண் உயர்கல்வி அமைச்சருக்குத் தெரியவில்லை'' என்றார்.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'ஒரே இரவில் எப்படி அறிவிக்க முடியுமா?; உயர்கல்வி அமைச்சருக்கு இது கூட தெரியாதா?'-வெளுத்த புதுமடம் ஹலீம்
PulseNews சுருக்கம்

தொகுதி மறுவரையறை விவகாரத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் ஒப்பிட்டு, அதை அரசு திடீரென அறிவிக்கக்கூடும் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் அச்சம் தெரிவித்துள்ளதைக் கேட்டு புதுமடம் ஹலீம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நக்கீரன் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார்.

அரசியல் விமர்சகர் புதுமடம் ஹலீம் பேசுகையில், தொகுதி மறுவரையறை மற்றும் நாட்டின் அரசியல் சாசனம் குறித்து உயர்கல்வி அமைச்சருக்குப் போதிய புரிதல் இல்லை என்று விமர்சித்துள்ளார். இத்தகைய முக்கியமான விஷயங்களை ஒரே இரவில் அறிவிக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி அவர் அமைச்சரைச் சாடியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#politics